Home தமிழகம் ‘மக்கள் தொடர்பு பணி ஒரு சவாலான பணி’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

‘மக்கள் தொடர்பு பணி ஒரு சவாலான பணி’அமைச்சர் கடம்பூர் ராஜூ பேச்சு

17
0
SHARE

சென்னை, மார்ச் 13&

மக்கள் தொடர்பு பணி ஒரு சவாலான பணி இதில் நல்ல பெயர் எடுப்பது கடினமான செயல் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார்.

சென்னை கலைவாணர் அரங்கில் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்களுக்கான பணி ஆய்வுக் கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பினை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு  தொடங்கி வைத்தார்.  தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை செயலாளர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர்  அனைவரையும் வரவேற்றார்.இந்த கூட்டத்தில் அமைச்சர் பேசியதாவது.

ரூ.50.8 கோடி செலவில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவு மண்டபம் அமைக்கவும்,  மாண்புமிகு அம்மா அவர்கள் வாழ்ந்த வேதா இல்லத்தை நினைவில்லமாக மாற்றவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

செய்தித்துறை வழியாக ரூ. 1.30 கோடி மதிப்பீட்டில் ஹைதர் அலி, திப்பு சுல்தான் நினைவு மண்டபம்.  ரூ.6.05 கோடி செலவில் நடிகர்  சிவாஜி கணேசன், மனு நீதி சோழன், பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஹைதர் அலி, திப்புசுல்தான் நினைவு மணிமண்டபங்கள் திறப்பு. ரூ.1.50 கோடி மதிப்பில் கோவை மாவட்டம் அன்னூரில் ர் நாராயணசாமி நாயுடு மணிமண்டபம். ‘கொடிகாத்த குமரன் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர் புலித்தேவன் பிறந்தநாட்களை அரசு  விழாவாக கொண்டாட ஆணை சிதம்பரத்தில் சுவாமி சகஜானந்தா  நினைவு மண்டபம் திறப்பு. திருச்செந்தூரில் பா. சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபம். ரூ.2.52 கோடி மதிப்பீட்டில், எம்.ஜி.ஆர்.  நூற்றாண்டு விழா வளைவு சென்னை காமராஜர் சாலையில் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. மக்கள் தொடர்பு பணியானது ஒரு சவாலான பணியாகும்

இதில் அனைவரையும் ஒருங்கிணைத்து சென்று நன்மதிப்பை பெறுவது கடினமான செயல்.இருப்பினும் தற்போது  செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள்  அனைத்து விடுமுறை நாட்களிலும், மழை வெள்ளம், புயல், பண்டிகை காலங்களிலும் விடுப்பின்றி பணியாற்றி இத்துறைக்கு பெருமை சேர்த்து வருகின்றனர். மேலும், ஊடக செய்தியாளர்களுக்கு வழங்கக்கூடிய விலையில்லா பேருந்து பயண அட்டை, செய்தியாளர் அங்கீகார அட்டை, வாடகைக் குடியிருப்பு, சலுகை விலையில் வீட்டு மனைப்பட்டா வழங்குதல், பத்திரிகையாளர் ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம், பணிக்காலத்தில் இறக்கும் பத்திரிகையாளர் குடும்ப நல உதவி போன்றவைகள் பெற்றுத் தருதல் போன்ற விதிமுறைகள் குறித்தும், துறை அலுவலர்கள் மூலம் உரிய அறிவுரை  அளிக்கப்படுகிறது.

அரசு பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில், அரசின் சாதனைகள் மற்றும் திட்டங்கள் நாளிதழ்களில் வெளியிடுவதோடு மட்டுமல்லாமல்,  இத்துறையின் மூலம் பல்வேறு சாதனைகள் குறித்து  குறும்படங்கள் தயார் செய்யப்பட்டு திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும் பல்வேறு திட்டங்களின் பயன்களும் குறும்படங்கள் வாயிலாக திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. திரையரங்குகளில் அரசு செய்திப்படங்களை முறையாக ஒளிபரப்பப்படுகிறதா என்பதை  மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர்கள் ஆகியோர் அவ்வப்போது ஆய்வு செய்திட வேண்டும்.  அரசின் செய்திப்படங்களை ஒளிபரப்பாத திரையரங்குகள் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்

இவ்வாறு  அமைச்சர்  பேசினார்.இக்கூட்டத்தில், கூடுதல் இயக்குநர் உல.ரவீந்திரன், இணை இயக்குநர்கள் கி.சாந்தி,  .சண்முகசுந்தரம், ன்புச்சோழன்,  துணை இயக்குநர்கள், உதவி இயக்குநர்கள், அனைத்து மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்கள் மற்றும் பிரிவு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முடிவில் கூடுதல் இயக்குநர் எஸ்.பி. எழிலழகன்  நன்றி கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here