Home உலகம் இந்திய & சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாட்டு தலைவர்களும் சம்மதம்

இந்திய & சீன எல்லையில் அமைதியை நிலைநாட்ட இரு நாட்டு தலைவர்களும் சம்மதம்

13
0
SHARE

ஜியாமென், செப். 6&

சீனாவில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜி ஜின்பிங் இடையே இரு நாட்டு உறவு குறித்த சந்திப்பு நடைபெற்றது.

இந்தச் சந்திப்பில்  இந்திய  சீன எல்லையில் அமைதி நிலவ இரு நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய வெளியுறவுச் செயலாளர் எஸ்.ஜெயஷங்கர் நேற்று (செவ்வாய்க்கிழமை) பத்திரிகையாளர்களிடம் கூறும்போது, “இந்திய  சீன எல்லையில் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை முன்னெடுக்க இரு நாட்டு தலைவர்களும் சம்மதம் தெரிவித்துள்ளனர். அதன் மூலம் இரு நாட்டு உறவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் அவர்கள் நம்புகின்றனர். இருவரின் சந்திப்பும் ஆக்கபூர்வமாக அமைந்தது” எனத் தெரிவித்தார்.இந்தியா, சீனா, பூடான் ஆகிய நாடுகளின் எல்லை சிக்கிம் மாநிலத்தின் டோக்லாம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சீனா சாலை அமைக்க கடந்த ஜூன் மாதம் 16ம் தேதி முயன்றது.

அதை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சீனா படைகளை குவித்தது. இந்தியாவும் பதிலுக்கு ராணுவ வீரர்களை அனுப்பியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே போர்ப் பதற்றம் ஏற்பட்டது.இதனையடுத்து இரு நாடுகளுக்கும் இடையேயான பேச்சு வார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு படைகள் வாபஸ் வாங்கப்பட்டன.டோக்லாம் எல்லைப் பிரச்சினைக்கு பிறகு மோடி , ஜி ஜின்பிங் பங்கேற்ற முதல் சந்திப்பு இதுவாகும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here