Home சம்பவம் திருத்தணியில் ரயில் மறியல் மக்கள் முன்னணி நிர்வாகிகள் கைது

திருத்தணியில் ரயில் மறியல் மக்கள் முன்னணி நிர்வாகிகள் கைது

25
0
SHARE

திருத்தணி, செப். 6& மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  திருத்தணியில் ரயில் மறியலில் ஈடுபட்ட தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் உட்பட 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாணவி அனிதா, நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியாததால் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காரணமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில்,  தலித் மக்கள் முன்னணி சார்பில் அனிதாவின் தற்கொலைக்கு காரணமான, மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து  தலித் மக்கள் முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் திருநாவுக்கரசு தலைமையில், அவ்வமைப்பினர் திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று காலை ரயில் மறியலில் ஈடுபட்டனர். திருப்பதியிலிருந்து சென்னை நோக்கி சென்ற  கருடாத்திரி  விரைவு ரயில் முன் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கருடாத்திரி ரயில் சேவை சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. ரயில் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். ரயில் மறியல் போராட்டம் காரணமாக சுமார் 15 நிமிடங்கள் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.