Home சம்பவம் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தி.மு.க. மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

9
0
SHARE

காஞ்சிபுரம், செப். 6&  அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் நுழைவுத் தேர்வில், தமிழகத்துக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் காஞ்சிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அரியலூர் மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான நீட் நுழைவுத் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்காத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து தி.மு.க. மாணவர் அணி சார்பில் காஞ்சிபுரம் வணிகர் வீதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அபுசாலி தலைமை தாங்கினார்.

மாணவர் கூட்டமைப்பு  நிர்வாகிகள் பிரசன்னா, மோகன், சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பிளஸ் டூ தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றும், நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண்களைப் பெற்றார் என்பதால் மருத்துவக் கல்வி பயில முடியாமல் மன வேதனை அடைந்து, அரியலூர் மாணவி அனிதா தற்கொலை செய்து கொண்டார்.  இவரது மரணம், நாடு முழுவதும் மிகுந்த அதிர்ச்சியை உருவாக்கியது. இந்நிலையில்,  மாணவி அனிதாவுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்; தமிழக மாணவர்களின் நலன் கருதி நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டும். நீட் தேர்வை புகுத்தி மாணவர்களுக்கு மன உளைச்சல் மற்றும் பொருளாதார இழப்புக்கு ஆட்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும், ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாணவர் அணி துணை அமைப்பாளர் ஏ.வி.சுரேஷ்குமார், ராம்பிரசாத் உள்ளிட்ட 70&க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here