Home தமிழகம் ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டங்கள்முதல்வர் பழனிசாமி திறந்து...

ரூ.7.25 கோடி மதிப்பீட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கட்டங்கள்முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்

10
0
SHARE

சென்னை, செப். 6 &

உயர்கல்வித் துறை சார்பில்  வேடசந்தூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழகஉறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 7 கோடி 25  லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடத்தை வீடியோ காண்பரன்சிங் மூலம்   முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், கடந்த 6 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில்  4 அரசு பொறியியல்  கல்லூரிகள், 56 அரசு , பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்,  16 அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரிகள் என மொத்தம் 76 அரசு கல்லூரிகள் துவக்கி வைக்கப்பட்டுள்ளன. அத்துடன், இக்கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கல்வி பயில வேண்டும் என்ற உயரிய நோக்கில், அக்கல்லூரிகளுக்கு நிரந்தரக் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரில் உள்ள மதுரை காமராசர் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.7 கோடி 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி நேற்று  வீடியோ கான்பரன்சிங் மூலமாகத் திறந்து வைத்தார்.

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவு மையத்திற்கு ரூ.1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பல்நோக்கு கருத்தரங்குக்கூடம், நாகர்கோவிலில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ. 7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள், பாரதிதாசன் பல்கலைக்கழக வளாகத்தில் 10,117 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ. 4 கோடி 85 லட்சம் மதிப்பீட்டில் நிறுவப்பட்டுள்ள சூரிய மின் ஆற்றல் கட்டமைப்பு,  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ரூ.7 கோடியே 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள், பரமக்குடியில் அழகப்பா பல்கலைக்கழக உறுப்பு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு

ரூ.7 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நிர்வாக மற்றும் கல்வியியல் கட்டடங்கள்,   காரைக்குடியில் அழகப்பா செட்டியார் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரிக்கு ரூ.1 கோடியே 98 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தன்னாட்சி அலுவலகக் கட்டடம்  என மொத்தம் ரூ.37 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கல்லூரிக் கட்டடங்கள் மற்றும் சூரியமின்னாற்றல் கட்டமைப்பினை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், வேடசந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் சுனீல் பாலீவால், கல்லூரிக் கல்வி இயக்குநர் மஞ்சுளா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here