Home சுடச்சுட நீட் தேர்வை எதிர்த்து 9ம் தேதி ஆர்ப்பாட்டம்டி.டி.வி. தினகரன் அறிக்கை

நீட் தேர்வை எதிர்த்து 9ம் தேதி ஆர்ப்பாட்டம்டி.டி.வி. தினகரன் அறிக்கை

9
0
SHARE

சென்னை, செப். 6

நீட் தேர்வை எதிர்த்து 9ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று டி.டி.வி. தினகரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அ.தி.மு.க. (அம்மா) துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய படிப்புகளில் சேர்வதற்கு நீட் என்னும் நுழைவுத் தேர்வை மத்திய அரசு அறிவித்து, மாநில அரசின் துணையோடு அதனை கட்டாயமாக மாணவர்கள் மீது திணித்திருப்பதால், தமிழக மாணவர்களின் மருத்துவக் கல்விவாய்ப்புகள் பறிபோவது நம்மை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன.

பள்ளிக் கல்வியை வெவ்வேறு பாடத்திட்டங்கள் வழியாக மாணவர்கள் பயின்று வரும் சூழ்நிலையில், சி.பி.எஸ்.இ. என்ற மத்திய அரசின் பாடத்திட்டத்தில் பயிலும் மாணவர்கள் மட்டும் பெரும் பயன் அடையும் வகையில் நீட் தேர்வுக்கான கேள்வித் தாள்கள் அமைந்துள்ளதால், மாநில அரசின் பாடத் திட்டத்தில் கல்வி பயிலும் மாணவர்கள் எவ்வளவு திறமையும், அறிவும் கொண்டிருந்தாலும் நீட் தேர்வை தமிழக மாணவர்கள் எதிர்கொள்ள முடியாத நிலை காணப்படுகிறது.

அரியலூர் மாவட்டம், குழுமூரில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழை மாணவி அனிதா 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் பல பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுதேர்ச்சியடைந்தாலும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதால் மருத்துவக் கல்விவாய்ப்பினை இழந்த அவலத்தையும், அதனால் மனமுடைந்து அவர் தற்கொலை செய்துகொண்ட துயரத்தையும் தமிழகம் கண்டு மனம் வெதும்பி நிற்கிறது.

மாநில அரசின் உரிமைகளைப் பறித்து, ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவ உயர்கல்வி வாய்ப்புகளை தகர்க்கும் மத்திய அரசின்நீட்தேர்வு உடனடியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்பதில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா உறுதியாக இருந்தார்.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு மாநில அரசின் உரிமைகள் ஒவ்வொன்றாக பறிபோகும் நிலையை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலை இனியும் தொடரக்கூடாது. தமிழ்ச் சமூகம் போராடிப் பெற்ற சமூக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். நம்முடைய இந்த உணர்வுகளை மத்திய அரசுக்குப் புரிய வைத்திடும் வகையில், அ.தி.மு.க. (அம்மா) மாணவர் அணியின் சார்பில் சென்னையில் 9ந் தேதி காலை 10 மணியளவில், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் சமூக நீதியைப் பாதுகாக்கும் சமூக நீதியைப் பாதுகாக்கும் வகையில்  நீட்  தேர்வு எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதில் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here