Home தலையங்கம் மாணவர்களிடம் கருத்து கேட்கலாமே…?

மாணவர்களிடம் கருத்து கேட்கலாமே…?

12
0
SHARE

தமிழகத்தின் கடைகோடியில் இருப்பவர்கள் கூட மருத்துவம் பயின்று கிராம மக்களுக்கு சேவை செய்து வந்தனர். ஆனால் தற்போது ‘நீட்’என்ற அரக்கன் உள்ளே நுழைந்து இதனை சுக்குநூறாக்கிவிட்டது. மருத்துவப்படிப்பு என்பது இனி கனவில் மட்டும் தான் நினைத்து பார்க்க வேண்டும் என்ற நிலைக்கு இன்றைய தமிழக கிராமப்புற மாணவர்கள் தள்ளப்பட்டுள்ளனர். ‘நீட்’ தேர்வு வினாக்கள் மத்திய அரசின் பாடத்

திட்டமான சி.பி.எஸ்.இ. தொகுப்பில் இருந்து மட்டுமே கேட்கப்படுகிறது.

இதனால் மாநில பாடத்திட்டத்தில் பயின்றவர்களுக்கு தலை சுற்றி விடுகிறது. மாநில பாடத்திட்டத்தின் மூலம் பயின்று அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகள் நீட் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுவிட்டனர். அவ்வாறு தேர்வை சந்திக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பு நேர்காணலுக்கு அழைக்கப்படாததால் அவர்கள் மனநிலையில் மாற்றம் ஏற்படுகிறது. ‘நாம் சரியாக தேர்வு எழுதவில்லை’ என்று மனதுக்குள் குமிறிப்போகின்றனர். இதனால் தான் அரியலூர் மாணவி தன்னுயிரை மாய்த்துக் கொண்டாரா? என்ற கேள்வி எழுகிறது.

நீட் தேர்வு எழுதி மருத்துவ‘டாக்டர் என்ற கனவை என் மனதில் புகுத்திய என் குடும்பம் அந்த எழுத்துக்களே என் மூலம் இனி கிடைக்காது என்ற வேதனையின் உச்சத்தில் சென்றுவிட்டது. என்னை உயிருள்ள ஜடமாக்கிவிட்டது’.  ‘மருத்துவக் கல்வி என்பது வெறும் துறை மீதான ஆர்வம் சார்ந்தது மட்டும் கிடையாது. என்னையும், என் குடும்பத்தையும், என் பொருளாதாரத்தையும், என்னை சுற்றியுள்ளவர்களையும் காத்துக்கொள்ளும் ஆயுதம்.’

‘‘’நீட்’ தேர்வை நாங்கள் வேண்டாம் என்று கூறவில்லை. நீட் தேர்வு எங்களுக்கு வேண்டும் தான். ஆனால் மத்திய அரசு முறையான பாடத்திட்டத்தை வழிவகுத்துவிட்டு நீட் தேர்வை நடத்தலாமே. மாநில பாடத்திட்டத்தில் பயின்ற எங்களால், மத்திய பாடத்திட்டத்தின் மூலம் நடத்தப்படும் ‘நீட்’ தேர்வை எப்படி சந்திக்க முடியும்? பாடத்திட்டத்தை மத்திய அரசு முறைப்படுத்திய பிறகு அல்லவா நீட் தேர்வை நடத்தியிருக்க வேண்டும்.

இதன் மூலம் மத்திய அரசின் ஓர வஞ்சனை எங்களுக்கு புரிகிறது. ஏழையின் குடும்பத்தில் பிறந்த மாணவர்கள், ஏழைகளாகவே இருக்க வேண்டும். பணக்காரர்கள், மேலும் மேலும் பணக்காரர்களாக வேண்டும் என்ற எழுதப்படாத கொள்கை நீட் தேர்வு மூலம் நிரூபனமாகியிருக்கிறது. நாங்கள் எதற்கும் சலைத்தவர்கள் கிடையாது. பாடத்திட்டத்தை  முறைப்படுத்திவிட்டோ… அல்லது எங்களுக்கு தேவையான அவகாசம் கொடுத்துவிட்டோ இந்த தேர்வை சந்திக்க சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யவில்லை”.

‘ நீட் தேர்வு அடிப்படையிலேயே தமிழகத்தில் மருத்துவ சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற தீர்ப்பை வழங்குவதற்கு முன்பு தமிழக மாணவர்கள் எந்த அளவுக்கு இதனால் கடினப்பட்டிருப்பார்கள் என்பதை உச்ச நீதிமன்றம் சிந்தித்திருக்க வேண்டாமா’? ‘தமிழக அரசு, உச்சநீதிமன்றத்தில் இதற்கு எதிராக உடனடியாக ரிட் மனு தாக்கல் செய்திருக்கலாமே. தற்போது தனியார் பல்கலைக்கழகத்துக்கு வருகிற 20&ம் தேதி வரை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று தமிழக அரசும் கோரிக்கை வைத்து பெற்றிருக்கலாமே…?’

இதுபோன்று மாணவர்களின் மனநிலை மாறிமாறி யோசித்துக் கொண்டிருக்கிறது. நீட் தேர்வு குறித்து மாணவர்கள் கூறும் கருத்துக்களை தமிழக அரசு கேட்டறிந்து அவற்றை மத்திய அரசிடமோ…, நீதிமன்றத்திலோ தாக்கல் சமர்ப்பக்கலாமே என்பது தான் மாணவர்களின் ஆதங்கமாக உள்ளது. இதுபற்றி தமிழக அரசு காலதாமதம் செய்யாமல் யோசிக்க ஏன் தயங்குகிறது… யோசித்தால் வழிபிறக்கும்…!