Home தலையங்கம் யாருக்குகூடுவது உண்மையான கூட்டம் ?

யாருக்குகூடுவது உண்மையான கூட்டம் ?

22
0
SHARE

பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் சாதனை புரிந்த தமிழக அரசியல் களத்தில் இன்று புதிய புதிய  நட்சத்திரங்கள் உருவாகி வருகின்றன. தி.மு.. தலைவர்  கருணாநிதிஓய்வுஎடுத்து வரும் நிலையில், தி.மு.கழகத்தை அதன் செயல் தலைவர் மு..  ஸ்டாலின் வழி நடத்தி வருகிறார்.  ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அந்த கட்சியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் பன்னீர் செல்வமும்  வழி நடத்தி வருகின்றனர். இவர்களை தவிர டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். இவர்கள் தவிர பாரதீய ஜனதா கட்சியின் தலைவர்  தமிழிசையும், காங்கிரசை மாநில தலைவர் திருநாவுக்கரசரும் தேசிய அரசியல் நடத்தி வருகிறார்கள். தே.மு.தி.  கட்சி மற்றும் கம்யூனிஸ்டுகளும் தங்கள்  அரசியல் பணியை செவ்வனே செய்து வருகிறார்கள்.

இப்படியாக தமிழக அரசியல் களம் சென்று கொண்டு இருக்கும் நிலையில், தமிழ் சினிமாவில் கோலோச்சி வரும் கமல ஹாசனும், ரஜினி காந்த்தும் தமிழக  அரசியல் களத்தில் குதிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். இதில் கமல ஹாசன் தனது அரசியல் கட்சியின் பெயரைமக்கள் நீதி மய்யம்என்றும், அதன்   கொள்கை, கோட்பாடுகளையும் மதுரையில் நடந்த பொதுக்கூட்டத்தில் கடந்த மாதம் அறிவித்தார். முன்னதாக அவர் ராமேஸ்வரம் சென்று மறைந்த குடியரசு  தலைவர் அப்துல் கலாமின் சமாதியில் அஞ்சலி செலுத்தி விட்டு, கலாமின் குடும்பத்தினரையும் சந்தித்து, ஆசி பெற்று விட்டு, மதுரையில் தனது கட்சியின்  பெயரை அறிவித்தார். இந்த பொதுக்கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினார்கள். இந்த கூட்டத்தில் கூடியவர்கள் அனைவரும் கமல ஹாசனின்  ரசிகர்களா? அல்லது வாக்காளர்களா?  இந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரது வாக்குகளும்,கமல ஹாசனுக்கு சிந்தாமல், சிதராமல் கிடைக்குமா ? தமிழகம்  முழுவதும் அவருக்கு ஆதரவு எப்படி இருக்கும் ? என்றகேள்விக்கணைகள்தமிழகஅரசியலாளர்களிடம்எழுந்துள்ளது

இந்த நிலையில், நடிகர் ரஜினி காந்தும் தமிழக அரசியல் களத்தில் குதித்து விட்டார். அவரும் தனது கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க போகிறார்.  அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் தமிழகம் உள்பட நாடு முழுவதும் நடக்க இருக்கிறது. அதற்குள் ரஜினி காந்த் தனது கட்சியின் பெயரையும், அதன் ஆன்மீக  அரசியல் கொள்கைகளையும் விரிவாக தமிழக மக்களுக்கு அறிவித்து விடுவார். மார்ச்.5ம் தேதி, சென்னை வேலப்பன் சாவடியில் எம்.ஜி.ஆர்.  சிலையை திறந்து  வைத்து  வைத்தார். அப்போது அவர் தனது போயஸ் கார்டன் இல்லத்தி?ல் இருந்து காரில் புறப்பட்டார். அப்போது ரோட்டின் இரு புறமும் திரளான மக்கள் கூடி,  அவரை நோக்கி கையசைத்தனர்.  பூந்த மல்லி ஹை ரோடு வழியாக வேலப்பன் சாவடி வரை ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அவருக்கு வரவேற்பு அளித்தனர்.  அவர் பங்கேற்ற நிகழ்ச்சியிலும் திரளானபேர் கலந்து கொண்டனர். இவர்களும், கமலஹாசனுக்கு கூடியது போன்று ரசிகர்களா? அல்லது உண்மையிலேயே  வாக்காளர்களா? என்ற கேள்வி எழாமல் இல்லை.

இதற்கிடையில் ஏற்கனவே தமிழக அரசியலில்  .தி.மு.க மற்றும் தி.மு.. கட்சிகள் கோலோச்சி வருகின்றன. ஆரம்பகால காங்கிரஸ் ஆட்சிக்கு பிறகு, இந்த  திராவிட கட்சிகள் தான் மாறி மாறி கோட்டையை கைப்பற்றி வருகிறார்கள். இவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கி நிலையானதாகவே இருப்பதாக  கருதப்படுகிறது. இவர்களுக்கு இருக்கும் வாக்கு வங்கியை,  கமல ஹாசனாலும், ரஜினி காந்தாலும் உடைக்க முடியுமா? இவர்களுக்கு கூடும் கூட்டம்  உண்மையிலேயே வாக்காளர்கள்தானா? இவர்களின் வாக்குகள் கடைசி நேரத்தில் கூட மாறாமல் இருக்குமா? வாக்குகள் விலை போகாமல் இருக்குமா?   (ஆர்.கே. நகர் வாக்காளர்கள், இடைத்தேர்தலின் போது கொடுக்கப்பட்ட இருபது ரூபாய் நோட்டை நம்பிக்கையுடன், இப்போதும் கூட  பாதுகாத்து வருகிறார்களே.,  இப்படித்தான் வாக்காளர்கள் இருக்கிறார்கள் என்பதற்கு இதுவே சான்று)

ஆக மொத்தத்தில் இனி வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன், தமிழக அரசியல் களம் சினிமா நட்சத்திரங்களால் கலக்கப்படுவது உறுதியாகி விட்டது. இந்த  கலங்கிய குட்டையில் யார் வாக்குகள் என்ற மீன்களை அள்ளப்போகிறார்கள் என்பது கேள்விக்குறியே !!!