Home அரசியல் முதல்வர் கூட்டியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் தங்க தமிழ்செல்வன் உறுதி

முதல்வர் கூட்டியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் தங்க தமிழ்செல்வன் உறுதி

18
0
SHARE

சென்னை, செப். 5&  முதல்வர் கூட்டியுள்ள எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள மாட்டோம் என்று தங்கதமிழ்செல்வன் தெரிவித்தார்.

இது குறித்து டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. தங்கதமிழ்செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாங்கள் வைத்திருக்கும் கோரிக்கை என்பது தமிழ்நாட்டு முதல்வரை மாற்ற வேண்டும். புதியதாக ஒருவரை உருவாக்க வேண்டும்.

அந்த கன்னியமான முறையில் நாங்கள் 21 பேரும் கட்டுப்பாடுடன் நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். அந்த நிலைப்பாடு எங்களுக்கு வந்தால் தான் எந்த ஒரு கூட்டத்திலும் கலந்து கொள்வோம்.

நாளை நடைபெறும் கூட்டத்திற்கு நாங்கள் செல்ல மாட்டோம். எங்களுக்கு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட செயலாளர்களின் ஆதரவு அதிகரித்துள்ளது.

மாணவி அனிதா இறந்த துக்கதில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வர் யாராவது சென்றார்களா? துணை முதல்வர் அன்று குருப்பெயர்ச்சிக்காக  தன்னுடைய ஊருக்கு சென்று சாமி கும்மிட்டுக்கொண்டிருந்தார். ஒரு சோகமான நிகழ்வு நடந்துள்ளது, 1176 மதிப்பெண்கள் பெற்று 196.5 மதிப்பெண்கள் கட்ஆப்  பெறற ஒரு மாணவி தாழ்த்தப்பட்ட பிரிவுகளுக்கு 191கட்ஆப் மதிப்பெண்னுக்கே சென்ற ஆண்டு கிடைத்துள்ளது. இந்த மாணவிக்கு ஸ்டான்லி, சென்னை மருத்துவக்கல்லூரியில் கிடைத்திருக்கும் முதல் மதிப்பெண் வரிசையிலே வந்திருக்க வேண்டும்.

அரசியலுக்கு துணிச்சல் வேண்டும், அந்த துணிச்சலை வைத்து அரசியல் செய்ய வேண்டும். அந்த நிலைபாடு இப்பொழுது இல்லை. எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டால் நிச்சயம் நாங்கள் அந்த நிலைப்பாட்டினை உருவாக்குவோம்.

இதனால் ஆளுநர் எங்களை அழைத்து பேசுவார் என்ற நம்பிக்கையுள்ளது. இல்லை என்றால் நாங்கள் கூடிபேசி ஒரு நல்ல முடிவு க்கு வருவோம்.

கொறடா எங்களை அ.தி.மு.க எம்.எல்.ஏக்களே இல்லை என்று தகுதிநிக்கம் செய்தீர்கள்.

இன்று எதற்காக எம்.எல்.ஏ கூட்டத்திற்கு  அழைக்கிறீர்கள். இப்பொழுது நாங்கள் அ.தி.மு.க எம்.எல்.ஏ.வா வேறு எம்.எல்.ஏ.வா எங்களுக்கு கூறுங்கள். நாங்கள் அ.தி.மு.க என்று நிருபித்துவிட்டோம்.இவ்வாறு தெரிவித்தார்.