Home அரசியல் தினகரனுக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு

தினகரனுக்கு மேலும் 2 எம்.பி.க்கள் ஆதரவு

24
0
SHARE

சென்னை, செப். 5& நாடாளுமன்ற உறுப்பினர்கள் உதயக்குமார், செங்குடடுவன் நேற்று டி.டி.வி தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இதுபற்றி செய்தியாளர்களுக்கு  செங்குட்டுவன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஓ.பி.எஸ். அணியில் இருந்த பொழுது கூட ஓ.பி.எஸ் செய்த தர்மயுத்தம்  ஊழலுக்கு எதிரானதே. ஆனால் இன்று அவருக்கு துணை முதல்வர் பதவியும், சில அமைச்சகப் பொறுப்புகளும் கொடுத்ததும் அவர் மனநிறைவுடன் அமைதியாகிவிட்டார். என்னால் அப்படியெல்லாம் அமைதிகொள்ள முடியாது. என்னுடைய நிலைப்பாடு ஊழலுக்கு எதிரானதே. ஓ.பி.எஸ். யாரை ஊழல்வாதிகள் என்று சொன்னாறோ, அவர்களுடன் என் போய் சேர்ந்தார் என அவரிடம் கேளுங்கள்.

அணிகள் இணைப்பு வேண்டாம் என் பதிவு செய்தோம். ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அணியில் இருக்கும் அனைவரும் கூறினோம். அவருடைய விருப்பத்திற்காக அவர் மாற்றிக்கொண்டார். இக்கட்சியை மறைந்த முதல்வர் ஜெயலலிதா உயிரைக்கொடுத்து உருவாக்கியுள்ளார். எனவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதே எங்கள் கருத்து.

பதவிவேண்டும் என்பதற்காக ஊழலை செய்து கொண்டு ஆட்சி நடத்துவதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. பொதுக்குழுவை கூட்டுவதற்கு சட்டப்படி அவர்களுக்கு அதிகாரம் கிடையாது. என்றார்.

இதனை தொடந்து நாடாளுமன்ற உறுப்பினர் உதயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், ஜெயலலிதாவுடன் 30 ஆண்டுகளுக்குமேல் இருந்தவர். ஒரு மேடையில் ஜெயலலிதாவே சசிகலா என்னுடைய தாய்க்கு இணையாவள் என்று கூறியுள்ளார்கள். இந்த சூழ்நிலையில் திடீரென ஜெயலலிதா மறைந்தார். அந்த நிலையில் பொதுக்குழு கூட்டப்பட்டது. வேதா இல்லத்தில் இருந்த சசிகலாவை பொதுக் குழுவிற்கு அழைக்கப்படவும் இல்லை. அவர் வரவும் இல்லை. அன்றைய தினம் பொதுக்குழுவில் இருந்த அனைவரும், இப்போது வசைபாடுபவர்களும் கூட ஒன்று சேர்ந்து ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

அந்த தீர்மானத்தின் படி ஜெயலலிதாவுடன் 33 ஆண்டு அரசியல் கற்று துணையாக இருந்த சசிகலா பொதுச்செயலாளராக வேண்டும் என்று விதிகளை காண்பித்து ஆயிரக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அன்றைய தினம் பொதுச்செயலாளராக  தேர்வு செய்யப்பட்ட சசிகலா, டி.டி.வி தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமித்தார்கள். தன்னுடைய பொறுப்புகளைத்தையும் பார்ப்பார் என்ற அறிக்கையும் கொடுத்து சென்றார்கள். இன்றைய தினம் வரையிலும் டி.டி.வி. தினகரன் கட்சியை நன்கு வழிநடத்தி செல்கிறார். எங்களுக்கு ஆட்சி தேவையில்லை. கட்சியே முக்கியம். அண்ணா கூறியது போல ஆட்சி என்பது தோளில் போடக்கூடிய துண்டு போன்றது. ஆனால் கட்சி என்பது இடுப்பில் உள்ள வேட்டி போன்றது. எனவே எங்களுக்கு மானம்தான் பெரியது என்பது போல டி.டி.வி தினகரன் கட்சியையும், கட்சி தொண்டர்களையும் கட்டிக்காத்து வருகிறார் என்றார்.