Home தமிழகம் எந்தவித அச்சமும் இல்லாமல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வரலாம் போலீசார் அறிவிப்பு

எந்தவித அச்சமும் இல்லாமல் மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வரலாம் போலீசார் அறிவிப்பு

26
0
SHARE

சென்னை, செப். 5& ‘பொதுமக்கள் எவ்வித அச்சமும் இன்றி, மெரினா கடற்கரைக்கு வந்து செல்லலாம்’ என, போலீசார் தெரிவித்துள்ளார்.

அரியலூரைச் சேர்ந்த மாணவி அனிதாவின் தற்கொலைக்கு காரணமாக, மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும், ‘நீட்’ தேர்வுக்கு தடை கோரியும், மெரினா கடற்கரையில் போரட்டம் துவங்கும் என, சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பப்படுகிறது.\இதையடுத்து, சென்னை மாநகர போலீசார், ‘மெரினா கடற்கரையில் போரட்டம் நடத்த அனுமதி இல்லை; மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என, எச்சரித்து இருந்தனர். மேலும், மெரினா காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் முதல் கலங்கரை விளக்கம் வரை, போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு இருந்தது.

இது குறித்து, போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:ஜல்லிக்கட்டு போரட்டத்திற்கு பின், மெரினா கடற்கரை தீவிர கண்காணிப்பு பகுதியாக மாற்றப்பட்டு உள்ளது. அங்கு, போரட்டம் நடத்த அனுமதி இல்லை.மெரினா கடற்கரையில், விதிமுறைகளை மீறி, குழுவாக ஒன்று கூடுவது, கூட்டங்கள் நடத்த முற்படுவது சட்ட விரோத செயலாகும். ஈடுபடுவோர் உடனடியாக கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.பொதுமக்கள் வழக்கம் போல், மெரினா கடற்கரைக்கு அச்சமில்லாமல் வந்து செல்லலாம். அவர்களிடம் எவ்வித கெடுபிடிகளும் காட்டப்பட மாட்டாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.