Home தலையங்கம் அடிப்படை உரிமை

அடிப்படை உரிமை

10
0
SHARE

தனி மனிதனின் அந்தரங்கம் அவரது அடிப்படை உரிமை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த சில நாட்களுக்கு முன்பு தீர்ப்பளித்தது. ஆதார் அடையாள அட்டைக்காக பொதுமக்களிடமிருந்து அரசு திரட்டும் தகவல்கள், கருவிழி மற்றும் கைரேகை பதிவுகள் முதலானவை தனி மனித அந்தரங்க அடிப்படை உரிமையை பறிக்கிறது என்று உச்சநீதிமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு வழக்கு தொடரப்பட்டது.

ஆதார் அட்டையை கட்டாயமாக்குவது அடிப்படை உரிமையை பாதிக்கிறது என்றும் கூறப்பட்டது.ஆனால் மத்திய அரசு தனி மனித அந்தரங்கம் அடிப்படை உரிமையல்ல என்று வாதிட்டு வருகிறது.

இதற்கு ஆதாரமாக ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகளையும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. தனி மனித அந்தரங்கம் அடிப்படை உரிமையா…? இல்லையா என்ற கேள்வி இதனால் முக்கியத்துவம் பெற்றது.

இதனால் இந்த பிரச்சினை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஒன்றுக்கும் மேற்பட்ட பெஞ்ச் அமர்வுகளில் நீதிபதிகள் அளிக்கும் தீர்ப்புகள் ஒரு சில சமயங்களில் முரண்பாடான தீர்ப்புகளாகவே இருந்திருக்கின்றன.

ஆனால் ஆதார் விவகாரத்தில் அரசியல் சாசன பெஞ்சில் இருந்த 9 நீதிபதிகளும் ஒருமித்த தீர்ப்பையே வழங்கி உள்ளனர். இந்திரா காந்தி ஆட்சியில் அவசர நிலை அமல்படுத்தப்பட்டபோது இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கானவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் எந்த சிறையில் உள்ளனர் என்பதுகூட தெரியாத நிலை இருந்தது. நீதிமன்றத்தில் போடப்பட்ட ஆட்கொணர்வு மனுக்கள்  தள்ளுபடி செய்யப்பட்டன. இந்த வழக்கை 5 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் விசாரித்தனர். இதில் 4 நீதிபதிகள் அவசர நிலை காலத்தில் வாழ்க்கையும், சுதந்திரமும் அடிப்படை உரிமைகள் அல்ல என்று தீர்ப்பளித்தனர். ஒருவர் மட்டுமே மாற்றி தீர்ப்பளித்தார். ஆனால் ஆதார் வழக்கில் அரசியல் சாசன பெஞ்சில் இருந்த அனைத்து நீதிபதிகளுமே ஒருமித்த தீர்ப்பு வழங்கியுள்ளனர்.

ஆகவே ஆதாரை அனைவருமே ஏற்றுக்கொள்ளும் நிலை உள்ளது. எல்லாவற்றுக்கும் இனி ஆதார் இருந்தால்தான் முடியும் என்ற நிலை உள்ளதால் இனியும் ஆதாரை எதிர்க்காமல் ஆதாருடன் நம்மையும் இணைத்துக் கொள்வதே சிறந்த வழியாகும். ஆகவே தனி மனித சுதந்திரத்தை பாதிக்கும் என்று கருதாமல் அனைவருமே ஆதார் அட்டையைவிரைவில் வாங்கி வைத்துக்கொண்டால் வீண் அலைச்சல்களை தவிர்க்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here