Home அரசியல் உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

உள்ளாட்சித் தேர்தல் அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிக்கை

19
0
SHARE

சென்னை, செப் 5&

உள்ளாட்சித் தேர்தல் அறிக்கைளை தாமதமன்றி வெளியிட வேண்டும் என்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தலை வரும் நவம்பர் 17ம் தேதிக்குள் நடத்தவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்ததைத் தொடர்ந்து அதற்காக அறிக்கையை வரும் 18ம் தேதிக்கும் வெளியிட வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இதனை தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தலுக்காக அறிக்கையை தாமதமின்றி வெளியிட வேண்டுமென பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆண்டு அக்டோபர் 17,19ம் தேதிகளில் உள்ளாட்சித்தேர்தல் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்த போது, 2011ம் ஆண்டு  மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி உள்ளாட்சித் தொகுதிகளை மறுவரையறை செய்யப்படவேண்டும் என் பா.ம.க உள்பட பல்வேறு அமைப்புகளால் வழக்கு  தொடரப்பட்டது.

எனவே சென்னை நீதிமன்றம் அப்போழுது நடக்கவிருந்த தேர்தலை ரத்து செய்தது. ஆனால்  ஓராண்டு ஆகிய நிலையிலும் இன்னும் தமிழக அரசு அந்த நடவடிக்கையை மேற்கொள்ளாத சூழ்நிலையில் மீண்டும் தேர்தலை அறிவித்திருப்பது மனநிறைவளிக்கவில்லை. இருந்தாலும் ஓராண்டுகளாக உள்ளாட்சி பணிகள் முடங்கி கிடக்கிற காரணத்தால் இந்த தேர்தல் நடப்பது வரவேற்கத்தக்கது.

கடந்த  முறை உள்ளாட்சித் தேர்தலுக்கு ஆளும் கட்சிக்கு மட்டும் அவகாசம் கொடுத்துவிட்டு, ஏனைய கட்சிகளுக்கு மனுத் தாக்கலுக்கு முந்தைய நாளில் தேர்தல்  அறிவிப்பை வெளியிடுவதை மாநிலத்தேர்தல் ஆணையம் வழக்கமாக கொண்டுள்ளது. உதாரணமாக அக்டோபர் 17,19 ஆகிய தேதிகளில் நடைபெறவிருந்த  உள்ளாட்சித் தேர்தலுக்கு செப்டம்பர் 26ம் தேதி தொடங்கும் என்பதை செப்டம்பர் 25ம் மாலை தான் அறிவித்தது.

ஆனால் இம்முறை அப்படியள்ளாமல் முன்கூட்டியே அறிவிப்பை  வெளியிட வேண்டுமென உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே தேர்தல் தேதிக்கு  பிறது வேட்பாளர்களை தேர்வு செய்ய அரசியல் கட்சிகளுக்கு போதிய அவகாசம் கிடைக்கும்.

அதேபோல் உள்ளாட்சி தொகுதிகள் மற்றும் இட ஒதுக்கீடு குறித்த விவரங்களை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் விரைந்து வெளியிடவேண்டும். உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு  செய்வதை தவிர்த்து உயர்நீதிமன்ற ஆணைப்படி உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

1996ம் ஆண்டு முதல் கடந்த தேர்தல் வரை உள்ளாட்சி தேர்தல் என்றாலே ஆளுங்கட்சிக்கு சாதகமான விதிமீறல்களும், வன்முறைகளும் கட்டவிழ்த்து  விடப்படுவது வாடிக்கையான ஒன்றாகி விட்டது. பல இடங்களில் பா.ம.க வெற்றிபெற்ற நிலையிலும் ஆளும் கட்சிகளே வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.  எனவே இம்முறையை முறைகேடுகளும், வன்முறைககும் தடுக்கப்பட வேண்டும், நேர்மையாக தேர்தல் நடத்தப்படவேண்டும்.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்படும் தேர்தல் அதிகாரிகள் ஆளுங்கட்சிக்கு சாதகமாக வளைந்து கொடுக்க நிர்பந்திக்கப்படுவர். எனவே  மத்திய அரசு பணியாளர்களை வாக்குப்பதிவு அதிகாரியாகவும், 2 ஊராட்சி ஒன்றியத்திற்கு ஒரு வெளிமாநில அதிகாரியை பார்வையாளராக நியமிக்க வேண்டும்.  பாதுகாப்பு பணிகளில் மத்திய துணை ராணுவம் அதிக எண்ணிக்கையில் ஈடுபடுத்தப்பட வே டும் என வலியுறுத்துகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.