Home சிறப்புச் செய்திகள் இன்று ஆசிரியர் தினம் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறுவோம்

இன்று ஆசிரியர் தினம் டாக்டர் ராதாகிருஷ்ணனை நினைவு கூறுவோம்

10
0
SHARE

இந்தியப் பெரு நாட்டில் ஆசிரியர்களுக்கு பெருமை சேர்த்தவர்  சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆவார். மனிதன் என்பவன் வளர்ச்சி என்ற பாதை நோக்கி செல்லும் ஒவ்வொரு இடத்திலும் ஆசிரியர்கள் என்பவர்கள் இருப்பார்கள். அவர்கள் பாடப் புத்தகங்கள் மற்றும் கற்பித்தலுடன் தங்கள் பணி முடிந்ததாக எண்ண மாட்டார்கள்.

மாணவர்களுக்கு, அவர்கள் செல்லும் இலக்கை அடையும் லட்சியத்தை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் வாழ்க்கையை மாற்றி அமைக்கின்றனர். அவர்களிடையே உயர்ந்த சிந்தனைகளை ஊக்குவிக்கின்றனர். அவர்கள் செல்லும் லட்சியப் பாதையை அடைய துணை நிற்கின்றனர்.

மாணவர்களின் வாழ்க்கைப் பயணத்தை, அவர்களின் எதிர்கால வாழ்க்கைமீது உறுதியான நம்பிக்கை வைக்கின்றனர். அவர்கள் மனிதர்கள் வடிவில் கடவுளாய் மாணவர்களுக்கு உதவுகின்றனர். அதுபோன்ற சிறந்த ஆசிரியராக போற்றப்பட்ட சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள், ஆசிரியர் தினமாக இன்று கொண்டாடப்படுவது ஆசிரியர்கள் அனைவருக்கும் நாம் செலுத்தும் நன்றிக்கடன்.

வாழ்க்கை குறிப்பு

மாணவர்களால் போற்றப்பட்ட ஆசிரியர் சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன். ஆசிரியர் என்பவருக்கு பெருமை தேடிதந்தவர் டாக்டர் சர்வப்பள்ளி ராதாகிருஷ்ணன். இவர், திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் 1888 ஆம் ஆண்டு செப்டம்பர் 5 ஆம்நாள் சாதாரண தெலுங்கு பிராமணக் குடும்பத்தில் பிறந்தார். அவரது தந்தை சர்வப்பள்ளி வீராசாமி திருத்தணியில் ஜமீன்தாரிடம் வருவாய் அதிகாரியாகப் பணியாற்றியவர். அவரது தாய் சீதம்மா. குழந்தை பருவம் முதலே கற்றலில் சிறந்து விலங்கிய ராதாகிருஷ்ணன் பள்ளிக் கல்வியைத் தொடர்ந்து வேலூர் ஊரிஸ் கல்லூரியில் சேர்ந்து சிறிது காலத்திலேயே, சென்னை கிறிஸ்டியன் கல்லூரியில் சேர்ந்து படித்தார். அக்கல்லூரியில் அவர் தனது 20 வயதிலேயே தத்துவப் பாடத்தில் முதுநிலை பட்டம் பெற்றார்.

சென்னைப் பல்கலைகழகத்தில் பட்டம் பெற்று அதே பல்கலைக்கழகத்தில் ஆசிரி¢யராக தனது வாழ்க்கைப் பயணத்தை துவக்கினார். அதே நேரத்தில் பத்திரி¢க்கைகளுக்கு கட்டுரைகள் எழுதி வந்தார். நாட்டின் பல்வேறு பல்கலைகழகங்களில் பேராசியராகப் பணியாற்றி மாணவ சமுதாயத்தில் மிகப் பெரி¢ய கல்விப் புரட்சியை ஏற்படுத்தினார். அவரி¢ன் கற்றல் திறனால் வளர்ந்த பல நாடுகள் தங்கள் நாட்டின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பிக்க அழைப்பு விடுத்தன. மேலை நாடுகளில் அவர் ஆற்றிய  சொற்பொழிவுகள் பலரி¢ன் சிந்தனைகளைத் தூண்டின. அவர் ஆற்றிய சொற்பொழிவுகள் இந்தியா நாட்டின் பெருமை, கலாச்சாரத்தை உயர்த்தும் வகையில் அமைந்திருந்தது.

1935 ஆண்டு பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியங்களின் பல்கலைக்கழகங்களின் மாநாட்டில் கலந்து கொண்டு கல்வியின் அவசியம், அவற்றை போதிக்கும் முறை குறித்து ராதாகிருஷ்ணன் ஆற்றிய உரை மேலை நாடுகளின் அறிஞர்கள் மத்தியில் பெறும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவரின் அபார சிந்தனை ஆற்றலை கண்டு, உலகின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் 133 கவுர டாக்டர் பட்டங்கள் வழங்கின. உயர்ந்த இடத்தில் இருந்தாலும் எளிமையான வாழ்கை வாய்ந்த ராதாகிருஷ்ணனுக்கு பல்வேறு பதவிகள் தேடி வந்தன.

ஆசிரி¢யராக வாழ்க்கைப் பயணத்தை துவக்கி நாட்டின் முதல் குடிமகன் வரை, தன் அபார கற்றல் திறமையால் மேலை நாடுகளின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பி பார்க்க வைத்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன், 1952 முதல் துணை ஜனாதிபதியாக 10 ஆண்டுகள் பணியாற்றினார். பின்னர், 1962 முதல் 1967 வரை நாட்டின் குடியரசுத் தலைவராக பணியாற்றினார்.  நாட்டுக்கு அவரி¢ன் சேவைகளைப் பாராட்டி நாட்டின் உயரி¢ய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது.                                                                          

ஆசிரி¢யர் பணிக்கு பெருமை சேர்த்தவர்

தாய், தந்தையர், தங்கள்  குழந்தையை  இந்த உலகத்திற்கு தருகின்றனர். ஆனால் ஆசிரி¢யர் என்பவர், இந்த உலகத்தையே அக்குழந்தைக்கு தருகின்றார். ஆசிரி¢யர் என்பவர் அறியாமை என்ற இருட்டை போக்கி வெளிச்சம் என்ற அறிவுக் கண் திறந்து, அதை  இந்த உலகிக்கு தருபவர் என்பதால்தான் ஆசிரி¢யர் பணி புனிதமான பணி என்று அழைக்கப்படுகின்றது.

மாதா, பிதா, குரு, தெய்வம்  என்ற சொல்லுக்கு ஏற்ப,  தாய் தந்தைக்கு பிறகு, குரு அடுத்த இடம்தான் தெய்வத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துணை பெருமைகள் நிறைந்த  ஆசிரி¢யர் பணிக்கு சிறப்பு சேர்த்தவர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆவார். அவர், பிறந்த நாளையே நாம் ஆசிரி¢யர் தினமாக கொண்டாடி வருகின்றோம். அன்றைய தினம் மத்திய, மாநில அரசுகள் சார்பில்  ஆசிரி¢யர்களுக்கு நல்லாசிரி¢யர் விருதுகள் வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுகின்றது.

திருத்தணியில் அவரி¢ன் நினைவிடங்கள்

திருத்தணியில் அவர் துவக்க கல்வி கற்ற, ஆலமரத் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி,  ராதாகிருஷ்ணன் நடுநிலைப் பள்ளியாக இன்று செயல்படுகின்றது. இங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு ராதாகிருஷ்ணன் அரசினர் மேல் நிலைப்பள்ளி என்று அழைக்கப்படுகின்றது. இப்பள்ளியில் ராதாகிருஷ்ணனின் ஆளுயர சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவர் வாழ்ந்த வீடு உள்ள தெருவிற்கு ராதாகிருஷ்ணன் தெரு என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதேபோல், அவர் குடியிருந்த வீடு, இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் சிறுவர் காப்பகம் மற்றும் நூலகமாக செயல்படுகிறது.  அனைத்திற்கும் மேலாக திருத்தணியில் பிறந்து இந்தியாவின் சிறந்த கல்வியாளராக, குடியரசுத் தலைவராக பெறுமைபெற்ற ராதாகிருஷ்ணன் தனது பிறந்த நாளை ஆசிரி¢யர் தினமாகக் கொண்டாடப்படுவது நம் அனைவருக்கும் பெருமையாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here