Home இந்தியா நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு: ‘தமிழக மாணவர்களை பினாமி அரசு பலி கொடுத்து விட்டது’...

நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு: ‘தமிழக மாணவர்களை பினாமி அரசு பலி கொடுத்து விட்டது’ ராமதாஸ் காட்டம்

25
0
SHARE

சென்னை, ஆக. 13&  மருத்துவக் கலந்தாய்வு விவகாரத்தில் தமிழக மாணவர்களை பினாமி அரசு பலி கொடுத்து விட்டது என்று பா... தலைவர்  ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பா... நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:& மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதில் பினாமி அரசு தோல்வியடைந்து விட்டது.

இதனால் நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கையை நடத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன்மூலம் மாணவர்களுக்கு மிகப்பெரிய துரோகத்தை அரசு இழைத்திருகிறது.

மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் தான் நடைபெறும் என்று மத்திய அரசு கடந்த  ஆண்டு அறிவித்தபோதே, அதிலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், 2016ஆம் ஆண்டு முடிவடையும் வரை உறங்கிக் கொண்டிருந்த அரசு, 2017ஆம் ஆண்டு ஜனவரி இறுதியில் தான் நீட் தேர்விலிருந்து தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு விலக்கு பெறுவதற்கான இரு சட்ட முன்வரைவுகளை இயற்றி மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது.   

அதன்பிறகும் கூட அவற்றுக்கு மத்திய அரசின் ஒப்புதலைப் பெறுவதற்கு எந்த முயற்சியையும் ஆட்சியாளர்கள்மேற்கொள்ளவில்லை.  இந்த விவகாரம் தீவிரமடைந்த பிறகு கடந்தமாதத்திலிருந்து தான் பெயரளவில் முயற்சி செய்தனர்.

தமிழகத்திற்குநீட்தேர்விலிருந்துவிலக்குபெறப்படுவதுஉறுதிஎன்றுகூறிமாணவர்களிடையே  தவறான நம்பிக்கையை ஏற்படுத்தி வந்த அரசு, அதை நிறைவேற்றாததன் மூலம் மாணவர்களை நட்டாற்றில் விட்டு விட்டது; இதனால் தமிழகத்தில் மொத்தமுள்ள மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 10 முதல் 20 விழுக்காடு கூட மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு  கிடைக்கப்போவதில்லை.

80 முதல் 90 சதவீத  இடங்கள் வரை சி.பி.எஸ்.. மாணவர்களுக்கு கிடைக்கும்.நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு பெறாவிட்டால் இத்தகைய விளைவுகள் தான் ஏற்படும்  என்பது தமிழக ஆட்சியாளர்களுக்கு நன்றாகத் தெரியும்.

தங்கள் தலையில் கத்தி விழாமல் காப்பாற்றிக் கொள்வதற்காக தமிழக மாணவர்களை பினாமி அரசு பலிகொடுத்திருக்கிறது. இதை மாணவர்கள் சமுதாயம் மன்னிக்காது. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.