Home விளையாட்டு ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றது

ஐ.பி.எல். போட்டி ஒளிபரப்பு உரிமத்தை ஸ்டார் இந்தியா நிறுவனம் பெற்றது

19
0
SHARE

மும்பை, செப். 5&

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியை முதல் 10 ஆண்டுகளுக்கு சோனி டெலிவிஷன் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்தது.

அடுத்த 5 ஆண்டுக்கான (2018 முதல் 2022 வரை) ஐ.பி.எல். கிரிக்கெட் டெலிவிஷன் ஒளிபரப்பு மற்றும் இண்டர்நெட், மொபைல் உள்ளடக்கிய டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமத்துக்கான டெண்டரை இந்திய கிரிக்கெட் வாரியம் சமீபத்தில் கோரி இருந்தது. ஒளிபரப்பு உரிமத்தை பெற பேஸ்புக், அமேசான், ரிலையன்ஸ், ஸ்டார் ஸ்போர்ட்ஸ், சோனி உள்பட 24 நிறுவனங்கள் விண்ணப்பித்து இருந்தன.

டெண்டர் மனுக்கள் மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் இன்று பிரித்து பார்க்கப்பட்டது. இதில் அதிக தொகைக்கு விண்ணப்பித்து இருந்த நிறுவனமான ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை பெற்றது.

ரூ. 16,347 கோடி தொகைக்கு ஸ்டார் இந்தியா நிறுவனம் ஒளிபரப்பு உரிமையை பெற்றுள்ளது.