Home விளையாட்டு கோவையில் கார் பந்தைய போட்டி: அனிந்தித்ரெட்டி முதலிடம்

கோவையில் கார் பந்தைய போட்டி: அனிந்தித்ரெட்டி முதலிடம்

10
0
SHARE

கோவை, செப். 5

கோவையில் நடந்த கார் பந்தய போட்டியில் அனிந்திக்ரெட்டி முதலிடம் பிடித்தார்.

கோவை செட்டிபாளையத்தில் உள்ள கரி மோட்டர் ஸ்பீடு வே கார் பந்தய மைதானத்தில் இந்த ஆண்டிற்கான கடைசி சீசன் கார் பந்தைய போட்டிகள் நடைபெற்றது. யூரோ ஜே.கே.17 போட்டியின் முதல் சுற்றில் முன்னணி வீரரான விஷ்ணு பிரசாத் இரண்டாம் இடத்திற்கும், ரிக்கி கப்போ மூன்றாம் இடத்திற்கும் தள்ளப்பட்ட போதும் சிறப்பாக காரை இயக்கிய அனிந்தித் ரெட்டி முதலிடத்தை பிடித்தார்.

இரண்டாம் சுற்றில் விஷ்ணு பிரசாத், அனிந்தித் ரெட்டி, ஆகாஷ் கவுடா ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து அசத்தினர். இருப்பினும் புள்ளிகள் அடிப்படையில் அனிந்தித் ரெட்டி முதலிடத்தில் உள்ளதால் விஷ்ணு பிரசாத் அடுத்த சுற்றில் தனது திறனை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார்.எல்.ஜி.பி பார்முலா 4 பந்தையத்தில் முதல் சுற்றில் திலிஜித், ராகுல் ரங்கசாமி, சந்தீப் குமார் ஆகியோர் முதல் 3 இடங்களையும், இரண்டாவது சுற்றில் திலிஜித், சந்தீப் குமார், ராகுல் ரங்கசாமி ஆகியோர் முதல் 3 இடங்களையும் பிடித்து  அசத்தினர். ஜிக்சர் கோப்பை இரு சக்கர வாகன போட்டியில் மிசோரம் வீரர்மல்சாவ் டாங்கிலியானா முதலிடத்தையும், சச்சின் சவுத்திரி, ஜோசப் மேத்யூ ஆகியோர் அடுத்தடுத்த இடங்களையும்  பிடித்தனர். ரெட் புல் ரூக்கி போட்டியில் இலங்கையின் ஜேசன் குணவர்தனே, லால்னுன்சங்கா, ஸ்பெயினின் லால்ஹ§ருஜீலா ஆகியோர் முதல் 3 இடங்களை பிடித்து அசத்தினர். இந்த தொடரின் அடுத்த சுற்று போட்டிகள் டெல்லியில் உள்ள மைதானத்தில் நடைபெற உள்ளது. 2 நாட்கள் நடைபெற்ற இப்போட்டியில் முன்னணி வீரர்களுக்கு தோல்வி முகம் ஏற்பட்ட போதும் இளம் வீரர்கள் வெற்றியை ஈட்டியது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here