Home சுடச்சுட அந்நிய செலாவணி வழக்கு தினகரனை எச்சரித்த சுப்ரீம்கோர்ட்டு

அந்நிய செலாவணி வழக்கு தினகரனை எச்சரித்த சுப்ரீம்கோர்ட்டு

21
0
SHARE

புதுடெல்லி, செப். 5&

அந்நிய செலாவணி வழக்கில் 3 மாதத்துக்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்ற உத்தரவுக்கு எதிராக தினகரன் தொடர்ந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், மனுதாரருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோர் மீது அமலாக்கத் துறை இரண்டு அந்நிய செலாவணி மோசடி வழக்குகளை தொடுத்தது.

இதில், பெரா வழக்கு உட்பட 2 வழக்குகளும் சென்னை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவுகள் ஒரு தலைபட்சமாக இருப்பதாக அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரிக்க நீதிமன்றம் குற்றச்சாட்டு பதிவுகளை முதலில் இருந்தே தொடங்க வேண்டும். 3 மாதத்தில் வழக்கு விசாரணையை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் 3 மாதத்தில் விசாரணையை முடிக்கக் கூடாது என்று தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், பொதுவாக ஒரு வழக்கை விரைவாக விசாரிக்கக் கோரித்தான் மனு தாக்கல் செய்யப்படும். அப்படி இருக்க வழக்கை 3 மாதத்திற்குள் முடிக்கக் கூடாது என்று தடை கேட்டு வழக்கு தொடர்ந்திருப்பதற்கு கண்டனம் தெரிவித்தனர்.

மேலும் மனுவை வாபஸ் பெறாவிட்டால் ரூ. 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரித்தனர். மேலும், இந்த மனுவை நீங்களே திரும்பப் பெறுகிறீர்களா அல்லது அபராதம் விதித்து, மனுவை தள்ளுபடி செய்யட்டுமா என்றும் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. இதனையடுத்து தினகரன் தரப்பு வழக்கறிஞர் மனுவை வாபஸ் பெற்றார். அதன் பின்னர் டிடிவி.

தினகரன் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டது.