Home சம்பவம் வீதிகள் தோறும் மதுபானக் கடைகள்: எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

வீதிகள் தோறும் மதுபானக் கடைகள்: எதிர்ப்பு தெரிவித்து பா.ம.க.வினர் ஆர்ப்பாட்டம்

9
0
SHARE

காஞ்சிபுரம், செப். 5&

உச்ச நீதிமன்ற ஆணையை சரியாகப் புரிந்துகொள்ளாமல் நகர்ப்புறங்களில் வீதிகள் தோறும், தமிழக அரசு மதுபானக் கடைகளைத் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து காஞ்சிபுரத்தில் பா... கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

உச்சநீதிமன்ற ஆணையை சரியாகப் புரிந்து கொள்ளாமல் நகர்ப்புறங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக வீதிகள் தோறும், அரசு மதுபானக் கடைகளைத் திறந்து வைக்கும் தமிழக அரசைக் கண்டித்து காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பா..க சார்பில் காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆ.செந்தில்குமார் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளர் பொன். கங்காதரன், மாவட்டச் செயலாளர் பெ. மகேஷ்குமார், முன்னாள் எம்.எல்.ஏ சக்தி கமலம்மாள், மாநில துணை அமைப்புச் செயலாளர் வ. உமாபதி, மாநில வன்னியர் சங்கத் துணைத் தலைவர் வி.செல்வராஜி உள்ளிட்ட ஏராளமான பா..க நிர்வாகிகளும், 100&க்கும் மேற்பட்ட தொண்டர்களும் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here