Home தமிழகம் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

19
0
SHARE

பொன்னேரி, செப். 5&

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரி உள்ளது. இந்தக் கல்லு£ரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் அரியலு£ர் அனிதாவின் இறப்பிற்குக் காரணமான மாநில, மத்திய அரசுகளைக் கண்டித்து திருவொற்றியூர் சாலை வழியாக கோஷம் எழுப்பியவாறு ஊர்வலம் சென்றனர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசு தன்னாட்சி கல்லூரி உள்ளது. இந்தக் கல்லு£ரியில் 4,500&க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் பட்ட வகுப்புகளில் கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில், +2 பாடத்தில், 1,176 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்வியில் இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அனிதாவின் மரணத்திற்கு காரணமான நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும் கல்லூரி மாணவ, மாணவியர்கள் வகுப்புகளைப் புறக்கணித்துவிட்டு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, அரிஹரன் சாலை, தேரடிச் சாலை வழியாக ஊர்வலமாக வந்து புதிய பஸ் நிலையத்தில் கோஷம் எழுப்பி போராட்டம் நடத்தினர். பின்பு கலைந்து சென்றனர்.