Home அரசியல் இணைப்பு நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றாதீர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மீது தீபா...

இணைப்பு நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை ஏமாற்றாதீர்கள் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். மீது தீபா தாக்கு

33
0
SHARE

சென்னை, ஆக.13&

இணைப்பு நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை ஏமற்ற முடியாது என்று ஓ.பி.எஸ். மற்றும் இ.பி.எஸ். தரப்பை ஜெ.தீபா கடுமையாக சாடியுள்ளார்.

எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை பொதுச்செயலாளர் ஜெ.தீபா விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;&

.பி.எஸ். முதல்வர் பதவியை சசிகலாவால் இழந்த பிறகு கண்கெட்ட பின்னே சூரிய நமஸ்காரம் செய்தது போல் அம்மா ஆன்மா பேசியதாக நாடகம் ஆடி அம்மாவின் மரணம் தொடர்பாக சி.பி.. விசாரணை வேண்டும் கட்சியிலிருந்து சசிகலாவயும், அவரது குடும்பத்தினரையும் நீக்க வேண்டுமென்று கோரிக்கையுடன் வெற்றி அரசியல் நடத்தினார். குற்றவாளி என அறிவிக்கபட்ட சசிகலாவை சிறைகே சென்று அரசியல் மற்றும் ஆட்சி குறித்து ஆலோசனை நடத்திய அமைச்சர்கள் கூட்டம்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அம்மாவின் வாரிசு நானே தேர்தல் களத்தில் நின்ற போது ஊழல் பெருச்சாளி திகார் தினகரனை வேட்பாளராக நிறுத்தி வீதி வீதியாக வாகு பணம் கொடுத்த பதவி வெறி பிடித்த கூட்டம் இ.பி.எஸ் தலைமையிலான கூட்டம் என்பதை எம்.ஜி.ஆர். மற்றும் அம்மாவின் தொண்டர்கள் ஒரு போதும் மறக்க மாட்டார்கள் மன்னிக்க மாட்டார்கள்.

மேலும் சசிகலாவையும் தினகரனையும் ஏற்றுக்கொள்கிறோம் என்று தேர்தல் ஆணையத்திற்கு பிரமாண பத்திரம் தாக்கல் செய்த வெட்கம் கெட்ட பதவிக்காக, மானம், மரியாதையை இழக்கும் கூட்டம் தான் இ.பி.எஸ். தலைமையிலான கூட்டம். சுயநலவாதிகளாக, அதிகார பதவிக்காக அலைகிற அபலைகளாக, சந்தர்ப்பவாதிகளின் கூடாரமாக ஓ.பி.எஸ்., .பி.எஸ்., தினகரன், சசிகலா கூட்டத்தை மக்கள் கருதுகிறார்கள்.

இணைப்பு என்ற நாடகம் நடத்தி தேர்தல் ஆணையத்தை இரு அணிகளும் ஏமாற்ற முடியாது. ஏமாற்றவும் விட மாட்டோம்.

தேர்தல்ஆணையம்முடிவுநமக்குவெற்றியைதரும். ஆகவே வெற்று மாயாஜால இணைப்பைப் பற்றி நாம் தெளிவுபடுத்த வேண்டியதில்லை

இவ்வாறு தீபா கூறியுள்ளார்.