Home சம்பவம் திருச்சியில் பரிதாபம் 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் பலி: 6 பேர்...

திருச்சியில் பரிதாபம் 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் பலி: 6 பேர் படுகாயம்

13
0
SHARE

திருச்சி, செப். 4& மலைக்கோட்டை அருகே 3 மாடி கட்டடம் இடிந்து 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 6 பேர் படுகாயமடைந்தனர்.

திருச்சியில் நேற்று காலை பழைய 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் தந்தை மகன் உட்பட 4 பேர் பலியானார்கள். இடிபாடுகளில் சிக்கி மீட்கப்பட்ட 6 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

திருச்சி மாவட்டம் ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் கண்ணப்பன் (70) திரைப்பட விநியோகஸ்தர். இவருக்கு சொந்தமாக மலைக்கோட்டை அருகே குளத்தெரு பகுதியில் 3 மாடி வீடு உள்ளது. இந்த கட்டிடம் சுமார் 50 வருடம் பழைமை வாய்ந்தது என கூறப்படுகின்றது. இவர் இந்த வீட்டில் உள்ள 3 தளங்களையும் வாடகைக்கு விட்டுள்ளார். இந்த வீட்டின் கீழ் தளத்தில் ரஞ்சிதம் (60). அவரது மகள் கிருஷ்ணவேணி (45). பேரன்கள் வினோத் (20) மற்றும் விக்னேஷ் (17) ஆகியோரும் முதல் தளத்தில் வசித்து வந்தனர். அதே தளத்தில் பழனி (35). அவரது மனைவி ராஜாத்தி (29). மகள் பரமேஸ்வரி (1) ஆகியோர் வசித்துவந்துள்ளனர்.

மற்றோரு பகுதியில் காந்தி மார்க்கெட்டில் தக்காளி வியாபாரிகளான கார்த்திக், மதிவாணன், கண்ணன், ஆகியோர் வசித்து வருகின்றனர். இரண்டாவது தளத்தில் அல்லிமால் தெருவில் லித்தோஸ் ஒன்றில் ஊழியராக உள்ள கார்த்திக்(30). அவரது மனைவி கார்த்திகா (29), மகன் ஹாறிஸ் (5) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்த வீட்டின் மேல் உள்ள பகுதியில் செட் அமைக்கப்பட்டு அதில் ஆட்டோ டிரைவர் சங்கர். அவரது மனைவி அன்பழகி மற்றும் மகள் திவ்யா, மகன் தினேஷ் ஆகியோர் வசித்து வந்துள்ளார்கள்.

நேற்று முன்தினம் மாலை திருச்சியில் பல இடங்களில் மழை தொடங்கி நள்ளிரவு வரை நன்றாக பெய்தது.

இந்தமழையால்நேற்றுஅதிகாலைதிடீரெனஇந்த 3 மாடி கட்டிடம் பெரும் சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதனால் கட்டிடத்தின் உள்ளே தூங்கிக் கொண்டிருந்த சுமார் 10 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கினர். கட்டிடத்தின் இடிந்து விழும் சத்ததை கேட்டு அருகில் இருந்தவர்கள் உடனே சம்பவ இடத்திற்கு வந்து போலீசாருக்கும், தீயணைப்பு துறையினருக்கும், ஆம்புலன்ஸ் வண்டிகளுக்கும் தகவல் கொடுத்து உடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றிய தகவல் அறிந்து வந்த மாநகர போலீஸ் கமிஷ்னர் அருண், வருவாய் அதிகாரி அகமது, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன், தாசில்தார் சக்திவேல் மற்றும் அரசு அதிகாரிகள் மீட்பு பணியை துரிதப்படுத்தினர். மீட்பு பணிகள் 3 தீயணைப்பு வணடிகள், 5 புல்டோசர்கள் உதவியுடன் நடைபெற்றது. இந்த நிலையில் மீட்பு பணியில் லித்தோஸ் ஊழியர் கார்த்திக். அவரது மனைவி கார்த்திகா. மகன் ஹாறிஸ் ஆகியோர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பட்னர். ஆனால் போகும் வழியிலேயே தந்தையும் மகனும் பரிதாபமாக உயிரொழிந்தனர்.

தெடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் இடிபாடுகளில் சிக்கி இருந்த 6 பேர் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பட்டனர். மீட்பு பணியில் பழனி. அவரது மனைவி ராசாத்தி சடலமாக மீட்கப்பட்டனர். ஆனால் அவர்களது 1 வயது மகள் பரமேஸ்வரி இடிபாடுகளில் இருந்து உயிருடன் மீட்கப்பட்டார். இதன் மூலம் உயிர்பலி எண்ணிக்கை 4 என காணப்படுகிறது. தொடர்ந்து இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகின்றது. இந்த கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.