Home விளையாட்டு உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் கவுரப் பிதுரி வெண்கலம் வென்றார்

உலக குத்துச்சண்டை போட்டி: இந்தியாவின் கவுரப் பிதுரி வெண்கலம் வென்றார்

23
0
SHARE

ஹம்பர்க், செப். 3& ஜெர்மன் நாட்டின் ஹம்பர்க் நகரில் நடைபெற்று வரும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில், 56 கிலோ பாண்டம் வெயிட் பிரிவில் இந்தியாவின் கவுரவ் பிதுரி  அரையிறுதிவரை முன்னேறினார்.

அரையிறுதிப் போட்டியில் அவர் அமெரிக்காவின் டியூக்ரா­கனை எதிர்த்து விளையாடினார். இதில், அமெரிக்க வீரர் டியூக்ராகன் வெற்றிபெற்றார்.  கவுரவ் பிதுரிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

இதன்மூலம் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 4வது பதக்கம் வென்றவர் என்ற சாதனையை கவுரவ் பிதுரி படைத்தார்.

முன்னதாக 2009ம் ஆண்டில் விஜேந்தர்சிங், 2011ல் விகாஸ் கிருஷ்ணன் மற்றும் 2015ம் ஆண்டில் சிவாதபா ஆகியோர் வெண்கலம் வென்றனர் என்பது நினைவு கூரத்தக்கது.