Home விளையாட்டு அமெரிக்க ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் ரபேல், பெடரர் வெற்றி

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தகுதி சுற்றில் ரபேல், பெடரர் வெற்றி

25
0
SHARE

நியூ­யார்க், செப்.3&

டென்­னிஸ் கிராண்ட் ஸ்லாம் போட்­டி­க­ளில் ஒன்­றான அமெ­ரிக்க ஓபன் டென்­னிஸ் போட்­டி­கள்  கடந்த மாதம் 28ம் தேதி தொடங்கி நடை­பெற்று வரு­கின்­றன. இதில் டென்­னிஸ் உல­கின் ஆண், பெண் நட்­சத்­திர வீரர்­கள், வீராங்­க­னை­கள் தொடர்ந்து தகு­திச் சுற்­றுப் போட்­டி­க­ளில் வெற்­றி­பெற்று அடுத்­த­டுத்த சுற்­றுக்கு முன்­னேறி வரு­கின்­ற­னர்.

ஆண்­கள் ஒற்­றை­யர் பிரிவு தகு­திச் சுற்­று­க­ளில் நட்­சத்­திர வீரர்­க­ளான ஸ்பெயின் நாட் டின் ராபெல் நாடல், ஜப்­பான் நாட்­டின் டாரோ டேனி­யலை எதிர்த்து விளை­யா­டி­னார். இவர்­கள் 2 பேருக்­கும் இடை­யே­யான போட்டி 4 சுற்­று­கள் நீடித்­தது. இதில் 4:6, 6:3, 6:2, 6:2 என்ற செட்­க­ளில் நடால் வெற்­றி ­பெற்­றார். சுவிட்­சர்­லாந்து நாட்­டின் ரோஜர் பெட­ரர், ரஷ்­யா­வின் மிக்­கெ­யில் யூஸ்­னியை எதிர்த்து விளை­யா­டி­னார்.

இருவருக்கும்; இடை­யே­யான ஆட்­டம் முன் எப்­போ­தும் இல்­லாத வகை­யில் 5 செட் வரை நீடித்­தது. இதில், பெட­ரர் 6:1, 6:7, 4:6, 6:4, 6:2 என்ற செட்­க­ளில் வெற்­றி­பெற்­றார்.

பெடரர் தன் அடுத்த சுற்று ஆட்­டத்­தில் ஸ்பெயின் நாட்­டின் லோபசை எதிர் கொள்­கி­றார். இவர்­கள் 2 பேரைத் தவிர, ஆஸ்­தி­ரி­யா­வின் டொமி­னிக் தியெம், அர்­ஜென்­டி­னா­வின் லியார்டோ மேயர், பெல்­ஜி­யத்­தின் டேவிட் கோபின், ஸ்பெயின் நாட்­டின் பவு­திஸ்டா ஆகி­யோர் தகு­திச் சுற்­றுப்­போட்­டி­க­ளில் வெற்­றி­பெற்­றுள்­ள­னர். பெண்­கள் ஒற்­றை­யர் பிரி­வில் ரஷ்­யா­வின் மரியா ஷர­போவா ஆகி­யோர் தங்­க­ளது அடுத்த தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளுக்­குள் சென்­று­விட்­ட­னர். இவர்­க­ளைத் தொடர்ந்து, செக் குடி­ய­ர­சின் லூசிக் சப­ரோவா, ஜப்­பான் நாட்­டின் குருமி  நாரா, ரஷ்­யா­வின் எலீனா வெஸ்­னினா, அமெ­ரிக்­கா­வின் வான்­டே­வெகெ மற்­றும் மேடி­சன் கெய்ஸ், சீனா­வின் சாங், போலந்­தின் அக்­னிஸ்கா ராட்­வான்ஸ்கா ஆகி­யோர் தகு­திச் சுற்று ஆட்­டங்­க­ளில் முன்­னேற்­றம் கண்­டுள்­ள­னர். ஆண், பெண் வீரர்­கள் வீராங்­க­னை­க­ளில் முதல் 32 இடத்­துக்­கும் பின்­னர் முதல் 16 இடத்­துக்­கு­மான போட்­டி­கள் நடை­பெ­றும்­போ­து­தான் ஆட்­டம் அனல் பறக்­கும் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இப்­போது 64வது தர வரி­சைக்­கான போட்­டி­கள் முடி­வ­டைந்­துள்­ளன.