Home அரசியல் கன்னடர்களின் மனதை காயப்படுத்திய காங்கிரஸ் தலைவி மன்னிப்பு கேட்டார்

கன்னடர்களின் மனதை காயப்படுத்திய காங்கிரஸ் தலைவி மன்னிப்பு கேட்டார்

37
0
SHARE

பெங்களூர், செப். 3&  கன்னடர்களின் மனதை காயப்படுத்திய மாநில காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவி லக்ஷ்மி ஹெப்பல்கர் மன்னிப்பு கேட்டார்

கர்நாடக மாநிலம் பெல்காமில் மாநில காங்கிரஸ் மகளிர் பிரிவு தலைவி லக்ஷ்மி ஹெப்பல்கர் சமீபத்தில் பேசிய ஆடியோ பதிவு சமூக வலைதளங்களில் பரவியது. அதில், ‘கர்நாடகாவில் இருந்து பெல்காம் பிரிந்து மகாராஷ்டிராவுடன் சேர்ந்தால் முதல் ஆளாக நான்தான்ஜெய் மகாராஷ்டிராஎன கோஷம் போடுவேன்என தெரிவித்திருந்தார்.

லக்ஷ்மி ஹெப்பல்கரின் இந்த பேச்சுக்கு பா.., ..த ஆகிய அரசியல் கட்சியினரும், கன்னட அமைப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இது தொடர்பாக முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், ‘‘பெல்காமை கர்நாடகாவிடம் இருந்து பிரிக்கும் பேச்சுக்கே இடமில்லை. காங்கிரஸ் கட்சி இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு துரோகம் செய்யப் பார்க்கிறது. இதற்காக லக்ஷ்மி ஹெப்பல்கர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்’’என்றார்.

இதற்கு லக்ஷ்மி ஹெப்பல்கர், ‘‘என் பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கிறது. சுதந்திரத்துக்கு முன்பு மகாராஷ்டிராவுடன் இருந்த பெல்காமை, மீண்டும் மகாராஷ்டிராவோடு இணைக்கக் கோரி பல ஆண்டுகளாக போராட்டம் நடக்கிறது.

பெல்காமில் உள்ள மராத்திய அமைப்புகளும், இளைஞர்களும் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம், பெல்காம் மகாராஷ்டிராவுக்கு சொந்தமானது என தீர்ப்பளித்தால் அனைவரும் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும்.

அப்போது நான்ஜெய் மகாராஷ்டிராஎன கோஷம் போடுவேன் என கூறினேன். இதை தவறாக புரிந்துகொண்டு வதந்தி பரப்பி விட்டார்கள். நான் எப்போதும் கர்நாடகாவின் ஆதரவாளர்தான். எனது பேச்சு கன்னடர்களின் மனதை காயப்படுத்தி இருந்தால், அதற்காக மன்னிப்பு கோருகிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.