Home தலையங்கம் ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்…!

ஊழலில் இந்தியாவுக்கு முதலிடம்…!

19
0
SHARE

இந்தியாவை முன்னேற்றுவோம்முன்னேற்றுவோம் என்று அரசியல்வாதிகளின் கோஷம் இன்று உண்மையாகி விட்டது. ஆம் இந்தியா இன்று உலக அளவில் ஊழல் செய்வதிலும், லஞ்சம் வாங்குவதிலும் முதல் இடத்தில் உள்ளது. இந்த அதிர்ச்சி தகவல் டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

டிரான்ஸ்பேரன்சி இன்டர்நேஷனல் (டி..)என்ற அமைப்பு 16 ஆசிய பசிபிக் நாடுகளில் ஊழல் நிலவரம் குறித்து கடந்த 18 மாதங்களுக்கு மேலாக ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வின்போது அந்த அமைப்பு சுமார் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களிடம் கருத்து கேட்டது. அதன்பின் ஊழல் நாடுகளின் தரவரிசை பட்டியலை இந்த அமைப்பு வெளியிட்டது.

இந்த ஆய்வு பற்றி போர்ப்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. அதில் ஊழல், லஞ்சம் வாங்குவதில் இந்தியா முதலிடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் லஞ்ச விகிதாச்சார அளவு 69 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளதாகவும் அந்த பத்திரிகை தகவல் கூறுகிறது. இந்தியாவை தொடர்ந்து ஊழல் செய்வதில் வியட்நாம், தாய்லாந்து, பாகிஸ்தான், மியான்மர் ஆகிய நாடுகள் முன்னணியில் உள்ளன.இந்தியாவில் பல்வேறு துறைகளிலும் லஞ்சம் தலை விரித்தாடுவதாகவும், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், மற்றும் பல்வேறு அடையாள ஆவணங்கள் பெறுவது, போலீஸ் துறை மற்றும் பல்வேறு துறைகளிலும் லஞ்சமும், ஊழலும் தலை விரித்தாடுவதாக அந்த பத்திரிகை செய்தியில் கூறப்பட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பின் போது  பிரதமர் மோடி ஊழலுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருவதாக 53 சதவீத மக்கள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு இந்த அமைப்பு நடத்திய உலக அளவிலான ஊழல் சர்வே முடிவில் 168 நாடுகளில் இந்தியா 76&வது இடத்தில் இருந்தது. இன்று வேகமாக முன்னேறி முதல் இடத்துக்கு வந்திருப்பது மிகவும் வெட்கக்கேடான விஷயம். முற்றிலுமாக இந்தியாவில் லஞ்ச& ஊழலை ஒழிக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். லஞ்ச&ஊழலில் ஈடுபடும் ஒருவரை போலீசார் கைது செய்தாலும், அவர் சிறை சென்று விட்டு சில நாட்களில் வெளியே வந்து பல ஆண்டுகள் வழக்கை இழுத்து அடித்துவிட்டு தீர்ப்பு வருவதற்குள் இறந்தே போய்விடுகிறார்.

உதாரணத்துக்கு 1990&ம் ஆண்டு தொடரப்பட்ட போபர்ஸ் பீரங்கி பேர வழக்கு இன்னும் விசாரணை முடியாமல் இழுத்துக்கொண்டே இருக்கிறது.  இதுபோன்ற நிலை இல்லாமல் ஊழல், லஞ்ச, லாவண்ய வழக்கில் சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு, உடனுக்குடன் தீர்ப்பு வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட ஊழல்வாதியின் சொத்துக்கள் அனைத்தையும் அரசுடைமை ஆக்கினால்தான் கொஞ்சமாவது இதுபோன்ற ஆசாமிகள் திருந்துவார்கள். இதற்கான நடவடிக்கைகளை மத்திய& மாநில அரசுகள் உடனடியாக எடுக்க வேண்டும்.