Home விளையாட்டு அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி

அகில இந்தியக் கூடைப்பந்து போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றி

43
0
SHARE

கோவை, செப். 2&  அகில இந்திய கூடைப்பந்து போடியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி வெற்றிப்பெற்றது.

கோவையில் நடைபெற்று வந்த அகில இந்திய கூடைப்பந்து போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து, இந்திய ராணுவ அணி விளையாடியது.  இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 77 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய இந்திய ராணுவ அணி 59 புள்ளிகள் எடுத்து தோல்வியடைந்தது. முன்னதாக அரைஇறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் 3வது மற்றும் 4வது இடத்திற்கான போட்டிக்கு விஜயா வங்கி மற்றும் பஞ்சாப் போலீஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் போலீஸ் அணி 95 புள்ளிகள் பெற்று மூன்றாவது இடத்தையும். எதிர்த்து விளையாடிய விஜயா வங்கி அணி 72 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தையும் பிடித்தன.

இறுதிப்போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு பி.எஸ்.ஜி. நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தலைமை தாங்கினார். சி.ஆர்.ஐ பம்ப், நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனரும், கோவை மாவட்ட கூடைப்பந்து கழகத் தலைவருமான ஜி.செல்வராஜ், பி.எஸ்.ஜி ஸ்போர்ட்ஸ் கிளப், தலைவர் டாக்டர். ருத்ரரூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்ற இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணிக்கு முதல் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் பி.எஸ்.ஜி. சுழல் கோப்பை வழங்கப்பட்டது. இரண்டாமிடம் பெற்ற இந்திய ராணுவ அணிக்கு ரூ.50 ஆயிரமும், மூன்றாம் இடம் பிடித்த பஞ்சாப் போலீஸ் அணிக்கு ரூ.25 ஆயிரமும், நான்காம் இடம் பிடித்த விஜயா வங்கி அணிக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்பட்டது. மேலும் இந்திய ராணுவ அணியின் விக்கி ஹடாவுக்கு சிறந்த விளையாட்டு வீரருக்கான பரிசாக ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டது.