Home இந்தியா பொதுத்துறைவங்கிகள் வாராக்கடன்களைவசூலிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி...

பொதுத்துறைவங்கிகள் வாராக்கடன்களைவசூலிக்க முன்னுரிமை கொடுக்க வேண்டும் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி வலியுறுத்தல்

10
0
SHARE

புதுடெல்லி, செப். 2&

பொதுத்துறை வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருக்கும் நிறுவனங்கள் மீது திவால் சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, வாராக்கடனை வசூலிப்பதற்கு வங்கிகள் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதுதொடர்பாக டெல்லியில் நிருபர்களை சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: பொதுத்துறை வங்கிகளில் மத்திய அரசு இதுவரை ரூ.70,000 கோடி முதலீடு செய்திருக்கிறது. பொதுத்துறை வங்கிகளில் கூடுதல் முதலீடு செய்வதற்கும் மத்திய அரசு தயாராக இருக்கிறது. ஆனால் வங்கிகளின் வாராக்கடன் பிரச்சினை முழுமையாக தீர்க்கப்பட வேண்டும். வாராக்கடனுக்கு வங்கிகள் முன்னுரிமை கொடுக்க வேண்டும்.வங்கிகள் சந்தையில் இருந்து நிதி திரட்டிக்கொள்வதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. திவால் சட்டத்தை பயன்படுத்தி இந்தியாவில், முதல் முறையாக கடனை திருப்பி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அதிக எண்ணிக்கையில் பொதுத்துறை வங்கிகள் இருக்கத் தேவையில்லை. சில பலமான வங்கிகள் மட்டுமே போதுமானது. வங்கிகள் இணைப்பை மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. வட்டி விகிதத்தை பொறுத்தவரை அனைத்து நிதி அமைச்சரும் குறைந்த வட்டி விகிதம் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள், ஆனால் தற்போதைய அமைப்பில் நிதி அமைச்சகம் எந்த மாற்றமும் செய்ய முடியாது.

இவ்வாறு அவர் கூறினார்.