Home இந்தியா செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது மத்திய...

செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்ற முடியாது மத்திய அரசு அதிகாரி பேட்டி

26
0
SHARE

புதுடெல்லி, செப். 2& செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய ரூ, 1000, ரூ. 500 நோட்டுகள் மாற்ற முடியாது என்று மத்திய அரசு அதிகாரி கூறினார்.

கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டை ஒழிக்க பழைய ரூ. 500, ரூ 1,000 நோட்டு செல்லாது என மத்திய அரசு கடந்த ஆ ண்டு நவம்பரில் அறிவித்தது. இவற்றை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்ற 50 நாள் அவகாசம் தரப்பட்டது. இந்த காலக் கட்டத்தில் வெளிநாடு சென்றிருந்த இந்தியர்களுக்கு ஜூன் 30 வரையிலும் ரூபாய் நோட்டு மாற்ற வாய்ப்பு தரப்பட்டது. அதுவரை எவ்வளவு பணம் டெபாசிட் செய்யப்பட்டது என்பதை ரிசர்வ் வங்கி கணக்கிட்டு வந்தது. அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்திகி கடந்த டிசம்பர் மாதம் உச்ச நீதிமன்றத்தில் குறிப்பிடுகையில், ரூ.10 முதல் ரூ. 11 லட்சம் கோடி மட்டும்தான் திரும்ப வரும் என தெரிவித்திருந்தார்.ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஆண்டறிக்கையில், பண மதிப்பு நீக்கம் செய்வதற்றில் 99 சதவீத நோட்டு வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டு விட்டது என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், மீதியுள்ள பணத்தை மாற்றுவதற்கு இரண்டாவது முறையாக அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இது குறித்து மத்திய பொருளாதார விவகார செயலாளர் எஸ். சி. கார்க் கூறுகையில், ‘‘செல்லாத நோட்டை மாற்ற மீண்டும் ஒரு முறை அவகாசம் அளிப்பதற்கான எந்த வழியும் இல்லை. மக்களின் ஊகங்கள் வெவ்வேறு விதமாக இருக்கலாம்.

ஆனால், மதிப்பு நீக்கம் செய்யப்பட்ட அனைத்து பணமும் வங்கிக்கு வர வேண்டும் என எதிர்பார்ப்பதாக மத்திய அரசு நாடாளுமன்ற அறிவிப்பு, நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கை உட்பட எந்த ஒரு இடத்திலும் ஒரு போதும் குறிப்பிடவில்லை. அட்டர்னி ஜெனரல் கூறியது அவரது தனிப்பட்ட கருத்துதான்.

2016&17 நிதியாண்டில் ரூ.58,000 கோடி டிவிடென்ட் அரசுக்கு வரும் என பட்ஜெட்டில் மதிப்பீடு செய்திருந்தோம். ரிசர்வ் வங்கி ரூ.30.659 கோடியை அரசிடம் வழங்கியுள்ளது’’ என்றார்.