Home இந்தியா டிசம்பர் 31&ந் தேதிவரை ‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

டிசம்பர் 31&ந் தேதிவரை ‘பான்’ எண்ணுடன் ‘ஆதார்’ எண்ணை இணைக்க அவகாசம் நீட்டிப்பு

20
0
SHARE

புதுடெல்லி, செப். 2&

பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பதற்கான காலக்கெடுவை டிசம்பர் 31&ந் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.

மத்தியஅரசின்பல்வேறுநலத்திட்டங்ளுக்குஆதார்எண் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களுக்கு  வருமான வரித்துறையால் நிரந்தர கண்க்கு எண் (பான்) அளிக்கப்படுகிறது.

   அந்த பான் எண்ணுடன், ஆதார்எண்ணைஇணைக்கவேண்டும்என்றுஆதார்எண்ணைஇணைக்கவேண்டும்என்றுமத்தியஅரசு

உத்தரவிட்டது. இதற்கான

காலக்கெடு ஜீலை 31&ந் தேதி என்று நிர்ணயிக்கப்பட்டது. பிறகு இந்த கால அவகாசம் ஆகஸ்ட் 31& ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.

   இந்த காலக்கெடு முடிவடைய இருந்த நிலையில், மத்திய அரசு திடீரென இந்த காலக்கெடுவை நீட்டித்து உத்தரவிட்டது.

  அதன்படி, பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க டிசம்பர் 31& ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசின்பல்வேறு சமூக நலத் திட்டங்களை பெற ஆதார் எண்ணை அளிப்பதற்க்கான கால அவகாசமும் டிசம்பர் 31&ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

   வங்கிக்கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கும் டிசம்பர் 31&ந் தேதிதான் கடைசி நாள் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில்,

பான் & ஆதார் இணைப்புக்கும் டிசம்பர் 31& தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

   ஆதார் பற்றிய மத்திய அரசின் முடிவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு விசாரணையை, சுப்ரீம் கோர்ட்டு நவம்பர் மாதத்துக்கு தள்ளி வைத்துள்ளது. காலக்கெடு நீட்டிப்புக்கு இதுவும் ஒரு காரணம் ஆகும்.

   இது பற்றி முறையான அறிவிக்கையை வருவாய்துறை வெளியிட உள்ளது.