Home தலையங்கம் கடும்விதிகளை தளர்த்தலாமே?

கடும்விதிகளை தளர்த்தலாமே?

23
0
SHARE

வாகனங்களை ஓட்டுபவர்கள் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்பது மோட்டார் வாகன விதிகளுக்கு உட்பட்டது. அப்படி லைசென்ஸ் எடுப்பவர்கள் ஒரிஜினலை வீட்டில் பத்திரமாக வைத்துவிட்டு கலர் ஜெராக்ஸ் எடுத்து அதனை லேமினேசன் போட்டு போக்குவரத்து போலீசார் கேட்கும்போது காண்பித்து வந்தனர். ஆனால் நேற்று முதல் இதற்கும் வந்தது புதுத்தடை. இனி வாகனம் ஓட்டுபவர்கள் ஒரிஜினல் லைசென்ஸ்தான் கையில் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாம். அப்படி ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்காவிட்டால் 3 மாத சிறை தண்டனை அல்லது ரூ.500 அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும் என்று மோட்டார் வாகன சட்டப்படி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. ஒரிஜினல் லைசென்ஸ் வீட்டில் எங்கு வைத்தோம் என்பதையும் சிலர் மறந்துவிட்டனர். ஒரிஜினல் டிரைவில் லைசென்சை தொலைப்பவர்கள் முறைப்படி போலீசில் புகார் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு புகார் தெரிவிக்கும்போது போலீசார் கொடுக்கும் சான்றை கொண்டு சுமார் 1 மாதத்துக்கு பிறகு தான் லைசென்ஸ் பெற முடியும். அதுவரை வாகனங்களை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. லைசென்ஸ் பெறுவதற்காக அலைச்சலும் அதிகமாகும். அதுமட்டுமின்றி மறைமுக செலவுகள் வேறு ஏற்படும்.

நேரடியாகவட்டாரபோக்குவரத்து

அலுவலகத்தில் லைசென்ஸ் விண்ணப்பித்திருந்தால் தொலைந்து போன லைசென்ஸ்க்கு பதில் வேறு ஒரு லைசென்ஸ் பெறலாம். ஆனால் டிரைவிங் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்து லைசென்ஸ் பெற்றவர்கள் அந்த டிரைவிங் பள்ளிக்கு செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படும். அப்படி செல்லும் போது ரினுவல் லைசென்ஸ்க்கு சுமார் ரூ.4500 வரை கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அதுமட்டும் இன்றி இன்று வாகனம் ஓட்டுபவர்கள் எத்தனை பேருக்கு சாலை போக்குவரத்து விதி முறைகள் தெரிகிறது. டிரைவிங் பள்ளியில் பணத்தை வாரி வழங்கி, பெயரளவிற்கே வாகனத்தை ஓட்டிக் காண்பித்து லைசென்ஸ் பெறுகின்றனர்.ஆனால் அவர்கள் முழுமையான போக்குவரத்து விதிகளை கற்பதில்லை. இதனால் விபத்துக்கள் அதிகரிக்கிறது. மேலும் புது ரக வாகனங்களில் அதிக சிசி திறன் பொறுத்தப்படுகிறது. இதனால் இளைஞர்கள் வாகனத்தை தாறுமாறாக ஓட்டி விபத்துக்களை சந்திக்கின்றனர். எனவே சாலைப் போக்குவரத்து விதிமுறைகளை அனைவரும் கண்டிப்பாக கடைப்பிடிக்கும்படி சட்டத்தை மாற்றியமைக்கலாம். ஒரிஜினல் லைசென்ஸ் வைத்திருக்க வேண்டும் என்று மட்டும் கூறினால் அனைவரும் சாலை போக்குவரத்து விதிகளை முறைப்படி கடைப்பிடிப்பார்களா என்றால் அது கேள்விக்குறியாகவே இருக்கும்?

மேலும் ஆதார் அட்டைகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்தில் செயல்படும் இ சேவை மையங்களில் பெறும் வசதி போன்று டிரைவிங் லைசென்ஸ்களையும் இ சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளும் வசதியை அறிமுகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் தேவையற்ற அலைச்சல், பணம் செலவு என்று எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. முன்பு தான் தொழில்நுட்பம் வளரவில்லை. இன்று அனைத்து அலுவலகங்களிலும் கணினி தொழில்நுட்ப வசதி உள்ளது. இதை பயன்படுத்தி விபத்துக்களை உண்டாக்கும் வாகனம் குறித்த தகவலை எளிதாக பெற்று நடவடிக்கை எடுக்கலாமே…? இதுபோன்று சாலை போக்குவரத்தில் ஏராளமான புதுமைகளை புகுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும் போது, ஒரிஜினல்லைசென்ஸ்கட்டாயம்என்றஅறிவிப்பு

அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. குற்றமிழைப்பவர்களுக்கு கூட தண்டனை குறைவாக இருக்கும் போலிருக்கிறது. டிரைவிங் லைசென்ஸ் இல்லை என்றால் சிறை தண்டனை என்றால் எப்படி ஏற்றுக்கொள்வது என்பதே வாகனங்களை ஓட்டுபவர்களின் ஆதங்கமாக உள்ளது. இதற்கு தீர்வு தேடி நீதிமன்றம் வரை இந்த பிரச்சனை சென்றுள்ளது. எனவே கடும் தண்டனையில் சில ரிலாக்சேஷன் செய்யலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.