Home விளையாட்டு தேசிய கூடைப்பந்து இறுதி போட்டி ஐ.ஓ.பி. & இந்திய ராணுவம் மோதல்

தேசிய கூடைப்பந்து இறுதி போட்டி ஐ.ஓ.பி. & இந்திய ராணுவம் மோதல்

15
0
SHARE

கோவை, செப். 1& கோவையில் நடைபெறும் தேசிய கூரைப்பந்து இறுதி போட்டியில் ஐ..பி அணியை எதிர்து இந்திய ராணுவ அணி விளையாடுகிறது.

கோவையில் நடைபெற்று வரும் அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் நடைபெற்ற அரையிறுதி முதல் போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியை எதிர்த்து விஜயா வங்கி அணி விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 74 புள்ளிகள் எடுத்து வெற்றியடைந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது அரையிறுதிப் போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்து இந்திய ராணுவ அணி விளையாடியது. இதில் இந்திய ராணுவ அணி 73 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. எதிர்த்து விளையாடிய பஞ்சாப் போலீஸ் அணி 65 எடுத்து தோல்வி அடைந்தது.

இறுதிப்போட்டியில்இந்தியன்ஓவர்சீஸ்வங்கிஅணியைஎதிர்த்துஇந்தியராணுவஅணிவிளையாடுகிறது. இறுதிப் போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் பி.எஸ்.ஜி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.கோபால கிருஷ்ணன் தலைமை வகிக்கிறார். சி.ஆர்.ஐ பம்ப், நிறுவனங்களின் இணை நிர்வாக இயக்குனர் மற்றும் கோவை மாவட்ட கூடைப்பந்து கழக தலைவருமான ஜி.செல்வராஜ், பி.எஸ்.ஜி. ஸ்போர்ட்ஸ் கிளப் தலைவர் டாக்டர்.ருத்ரரூர்த்தி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கோவை மாவட்ட கிரிக்கெட் சங்க தலைவரும் எஸ்.என்.ஆர் நிறுவனங்களின் இணை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்க உள்ளார். போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு வழங்கப்படும் பரிசுகள் விபரம் முதல் பரிசு ரூ. 1,00,000 மற்றும் பி.எஸ்.ஜி. சுழல் கோப்பையும், இரண்டாமிடம் பெறும் அணிக்கு ரூ.50,000, முன்றாம் இடம் பெறும் அணிக்கு ரூ.25,000, நான்காம் இடம் பெறும் அணிக்கு ரூ.15,000 மற்றும் சிறந்த விளையாட்டு வீராக்கான பரிசாக ரூ.10.000 வழங்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here