Home உலகம் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு பாக். முன்னாள் பிரதமர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

பெனாசீர் பூட்டோ கொலை வழக்கு பாக். முன்னாள் பிரதமர் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிப்பு

24
0
SHARE

லாகூர், செப். 1& பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசீர் பூட்டோ கொலை வழக்கில் அந்நாட்டின்முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். முன்னதாக கடந்த 2007&ல் ராவல்பிண்டியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது பெனாசிர் பூட்டோவை துப்பாக்கியால் சுட்டும் வெடிகுண்டுகளை அவர் மீது வீசி தாக்குதல் நடத்தியும் மர்ம நபர்களால் படுகொலை செய்தனர். இவ்வழக்கு ராவல்பிண்டி பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த கொலையில் அப்போது அதிபராக இருந்த முஷாரப்பிற்கு தொடர்புள்ளதாக குற்றம்சாட்டப்பட்டது. இதனையடுத்து முஷாரப் துபாயில் தஞ்சமடைந்தார். இந்நிலையில் வழக்கை விசாரித்த பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் முஷாரப்பை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது தீர்ப்பு வழங்கியுள்ளது மேலும் முஷாரப்பின் சொத்துகளை முடக்கவும் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் 2 பேருக்கு 17 வருட சிறை தண்டனையும், 5 பேரை விடுவித்தும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.