Home தலையங்கம் விபரீதத்தை விலை கொடுத்து வாங்கலாமா…?

விபரீதத்தை விலை கொடுத்து வாங்கலாமா…?

51
0
SHARE

என்னதான் 6 அறிவு இருந்தாலும் மனிதர்கள் அதனை சரியாக உபயோகித்தால்தான் பூ உலகில் வாழ முடியும். ஆனால் தற்போதுள்ள தொழில்நுட்பம் செல்போனில் உலகையே அடக்கிவிட்டது. இந்த வளர்ச்சி 6 அறிவு கொண்ட மனிதனையும் குரங்காக மாற்றிவிட்டது என்றே சொல்லலாம்.  மனிதர்கள் உபயோகிக்கும் செல்போன் மூலம் உயிரையே பறிக்கும் கொடிய வைரஸ் இப்போது பரவிக் கொண்டிருக்கிறது.

ஆம்… ‘புளூ வேல்  கேம் தான் அது. உயிரைக் கொடு என்று கேட்கும் இந்த விளையாட்டில் இளைய சமுதாயத்துக்கு எத்தனை எத்தனை ஆர்வம். இந்த விளையாட்டை ரஷ்யாவை சேர்ந்த பிலிப்பி புடிகின் என்ற 22 வயது இளைஞன் கண்டுபிடித்தார். சைக்காலஜி படித்த இவர் சோம்பேறிகளை களை எடுப்பதற்காக இந்த விளையாட்டை கண்டுபிடித்ததாக கூறியுள்ளார்மூளைச் சலவை செய்யும் இந்த விளையாட்டுக்கு உலகம் முழுவதும் ஏராளமானோர் இறந்துள்ளனர்.

புளூ வேல்என்ற கேம் மொத்தம் 50 நாட்கள் நீள்கிறது. விளையாடும் நபர்களுக்கு ஆரம்பத்தில் எளிதான இலக்குகள் விதிக்கப்பட்டு, கடைசி நாளான 50வது தினத்தன்றுதற்கொலை செய்துகொள்என்று நிபந்தனை விதிக்கிறதுஇந்தவிளையாட்டைகையாள்பவர்கள்அந்தகேமுக்குஅடிமையாகிறார்கள். உயரமான கட்டடங்களில் இருந்து குதித்து தங்கள் இன்னுயிரை மாய்த்துக் கொள்கின்றனர்.

இந்த விளையாட்டை கடந்த 1 வருடமாக  கூகுளில் அதிகம் தேடிய நாடுகளின் பட்டியலில் இந்தியா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் உள்ளது. அதில் சென்னை உள்பட ஐந்து இந்திய நகரங்கள் இடம்பெற்றுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுசில நாட்களுக்கு  முன்பு மும்பையை சேர்ந்த சிறுவன் இந்த விளையாட்டில் சிக்கி தனது உயிரை இழந்தான். தற்போது மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் விளாச்சேரியை அடுத்த மொட்டமலையை சேர்ந்த விக்னேஷ் என்ற 19 வயது வாலிபர் இறந்துள்ளார். சில தினங்களுக்கு முன்பு சென்னையில் ஒரு பெண் மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். முதுகு தண்டு உடைந்து அவர் அவதிப்பட்டு வருகிறார்.

இந்த கேம் மனிதர்களை பைத்தியம் பிடித்தது போல் ஆக்கிவிடுகிறது. 4 சுவர்களுக்குள்ளேயே இருக்க வேண்டும். அதிகாலை 4 மணிக்கு எழவேண்டும். தனியாக சுடுகாட்டுக்கு செல்ல வேண்டும் என்று கொஞ்சம் கொஞ்சமாக தனிமைப்படுத்தப்பட்டு கடைசியில் உயிரை விடும் அளவுக்கு அவர்கள் மனநிலையை கொண்டு சென்றுவிடுகிறது.

கடவுளின் படைப்புகளில் அற்புதமாக படைப்பு மனிதன் தான். அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிதுஅதனினும் அரிது கூன், குருடுசெவிடு இன்றி குறைகள் இல்லாமல் பிறத்தல் அதைவிட அரிது. அப்படிப்பட்ட அதிசயம் மனிதப்பிறவியை சாதாரண செல்போன் கேமுக்கு அடிமையாக்கிவிடலாமா…?. மற்ற உயிர்களை விட மனிதருக்கு கடவுள் பகுத்தறிவை கொடுத்துள்ளான்.

இதனை எத்தனை இளைய சமுதாயம் உணர்ந்துள்ளது…? சாதாரண செல்போன் கேம் உயிரை பறிக்கும் அளவுக்கு விட்டுக்கொடுக்கலாமா…? உயிர் போனால் திரும்ப வருமா…? நாளைய சமுதாயம் இளம் சமுதாயத்திடம் உள்ளது என்பதை உணர வேண்டும். புளுவேல் போன்ற விளையாட்டுக்களை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக மூளையை நல்ல விசயத்துக்கு பயன்படுத்தினால் நலம் பெறலாமே…! இளைய சமுதாயம் புரிந்துகொள்ளுமா…?