Home சினிமா பாலிவுட்டில் ராய் லட்சுமி அதிரடி போஸ்

பாலிவுட்டில் ராய் லட்சுமி அதிரடி போஸ்

17
0
SHARE

ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகப் போகிறார். தீபக் ஷிவ்தாசனி இயக்கியுள்ளஜீலி&2′ படத்தில் ராய் லட்சுமி தான் ஹீரோயின். இவருடன் சோனாக்ஷி சின்ஹா நடித்திருக்கிறார். முதல் பாகத்தில் சந்தர்ப்ப வசத்தால் பாலியல் தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் மீண்டும் குடும்ப வாழ்க்கைக்கு திரும்பும்போது எந்தமாதிரியான எதிர்ப்புகளை சம்பாதிக்கிறார் என்பதை காட்டியிருப்பார்கள். இந்த இரண்டாம் பாகத்தில் ஒரு பெண்ணின் போராட்ட வாழ்க்கையை காட்டியிருக்கிறார்கள்.

படத்தில் ஹாட்டான காட்சிகள் நிறையவே இருக்கிறதாம். ராய் லட்சுமியோ எந்தவித தயக்கமும் இல்லாமல் மேலாடையில்லாமல் நடித்திருக்கிறார் ஹீரோவே இல்லாத இந்தப் படத்தில், ராய் லட்சுமி தான் மொத்தப் படத்தையும் தாங்கிப் பிடிக்கிறார் என்கிறார்கள். இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில், ஓய்வெடுப்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளார் ராய் லட்சுமி. ப்ளோரிடா மாகாணத்தில் அமைந்துள்ள மியாமி பீச்சில் ஹாயாக அமர்ந்து பொழுதைக் கழிக்கிறார். அந்தப் புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளவர், ‘என் மனதைத்தான் நான் ஃபாலோ செய்கிறேன். அது என்னை பீச்சுக்கு போகச் சொன்னதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார்.