Home சினிமா சிம்புவை இயக்கும் மோகன்ராஜா

சிம்புவை இயக்கும் மோகன்ராஜா

8
0
SHARE

 வேலைக்காரன் படத்தை எடுத்த மோகன் ராஜாவுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இவரது அடுத்த படம் யாரை வைத்து இயக்க இருக்கிறார் என்கிற எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. எப்போதும் சமூக பிரச்சனைகளை மையப்படுத்தியே படங்கள் எடுப்பதால் அடுத்த கதையையும் அந்த நோக்கில் எழுதியிருக்கிறாராம். இந்த கதைக்கு பொருத்தமாக சிம்பு இருப்பார் என்று ராஜா முடிவு செய்திருக்கிறார். அதனால் அவருக்கு கதை சொல்லி ஓகே வாங்கியிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் சிம்பு மீது தயாரிப்பாளர்கள் சங்கம் நடவடிக்கை எடுத்திருப்பதால் சிக்கல் வருமோ என்று தயங்கியவரை சிம்பு தான் உற்சாகப்படுத்தியிருக்கிறார். இப்போது மணிரத்னம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். அடுத்து சரண் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறேன். அதனால் நீங்கள் வேலையை ஆரம்பியுங்கள். எது வந்தாலும் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியிருப்பதாக தெரிகிறது. அந்த உற்சாகத்தில் வேலையை ஆரம்பித்திருக்கிறார் மோகன் ராஜா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here