Home சிறப்புச் செய்திகள் போகிப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்

போகிப் பண்டிகையை ஏன் கொண்டாடுகிறோம்

20
0
SHARE

போகி பண்டிகை என்பது இந்திரனுக்குரிய விழாவாகும்  நமது வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவங்களை நினைத்துக் கொண்டிராமல் இனி நமக்கு நன்மை தரக்கூடிய புதியனவற்றை வரவேற்றுப் போற்ற வேண்டும் என்பதை அடிப்படையாக வைத்துக் கொண்டாடப்படுவது போகிப் பண்டிகை.

நம்மை வாட்டும் துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி’ என்று அந்த காலத்தில் அழைக்கப்பட்டது ஆனால் அந்தச் சொல் நாளடைவில் மருவி “போகி’ என்றாகிவிட்டது.போகி என்றால் “”போகமுடையவன்” என்றும் ஒரு பொருள் உண்டு. இப்பெயர், யாரை குறிக்கும் என்று பார்த்தால் அது இந்திரனை குறிக்கும். அவன் அருளால் மழை பெய்து பயிர் விளைந்ததைக் குறிக்கும் வகையில் இந்திரனுக்குரிய விழாவாகப் போகி விளங்குகிறது அவரது கருணைக்கு நன்றி செலுத்தும் விழா தான் இது

பாரம்பரிய முறைப்படி பார்த்தால் போகி அன்று பாய், முறம் மற்றும் நமது வீட்டில் இருக்கும் பழைய பொருட்களை தீ மூட்டி எரிப்பது தான் மரபு. பழயன கழிதலும் புதியன புகுதலும் என்று நமது முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்ட மரபு விட்டுப்போகாமல் தொடர்ந்து வரும் பண்டிகை போக்கிப் பண்டிகை

இப்பண்டிகையின் முக்கியத்துவத்தை நம்மில் பலருக்கு தெரிவதில்லை

நமது வீடும் அண்டமும் சுத்தமாக இருக்க வேண்டும் என்று வாய்வழியாகச் சொல்லியதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு வீட்டிலும் அதனைக் கட்டாயம், நடைமுறைப்படுத்தியே ஆகவேண்டும் என்கிற உறுதியோடு ஒருங்கிணைந்த தூய்மைப் பணியினை ஒட்டுமொத்த மக்களும் ஒரே நேரத்தில் செய்யவேண்டும் என்பதற்கான ஏற்பாடுதான் போகிப் பண்டிகை. இந்த கருத்தை மனதில் வைத்து கொண்டு அதை நம் முன்னோர்கள் அதற்கு ஒரு பண்டிகை என்று கொண்டாடிய விதம் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது என்று சொன்னால் அது மிகையாகாது வீட்டிலே முக்கியமாகத் தொற்றுக்கள் வளரும் மூலவாய்களை அவர்கள் அடையாளம் கொண்டு அவற்றை அறிவியல் முறைப்படி அழித்து, தனி வீடு மற்றும் பொதுச் சுகாதாரத்தை நிலைநிறுத்தினர் என்பது தான் நிதர்சனமான உண்மை

தலையணை, படுக்கைப் பொருட்கள், பாய், துடைப்பம், கால்மிதிக்கும் கோணிப்பைகள், மிகக்குறிப்பாக, பழைய துண்கள் இனிமேல் துவைத்தாலும் அழுக்கு நீங்காது எனும் படியாய்ப் பழையதாகிப்போன கைத்துடைப்பான்கள், கந்தைகள், அடுப்படியில் தொடர்ந்து பயன்படுத்தியதால் தேய்ந்து போன சாமான்கள் தொழுவ எச்சங்கள், ஆகியனவற்றை எரித்துப் பொசுக்கி அவற்றில் தேங்கிச் செறிந்து நின்ற அனைத்துத் தொற்றுக்களையும், நம் முன்னோர் நீக்கினர் என்பது அவர்களது அறிவியல் கூர்மையை நமக்கு உணர்த்துகிறது அல்லவா

இந்த சமயத்தில் வீட்டின் தரை மற்றும் சுவர்களில் உள்ள ஓட்டைப் பொத்தல்களை அடைத்து, வெள்ளையடிப்பது, வாயிற்படிகளை மராமத்து செய்து வண்ணமடிப்பது, வீட்டுவாசலை மண்ணடித்து உயர்த்துவது என்கிற ஒவ்வொன்றுமே அவர்கள் கவனமாக செய்து வந்தது நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது.

பாக்டீரியாக்கள் வைரஸ் தோற்றுவாய்கள், ஆகியனவற்றை நிறந்தரமாக ஒழிக்கவேண்டுமேன்றால், அதற்கு எரியூட்டலே மிகச்சிறந்தவழி என்கிற அறிவியல் உண்மையை அவர்கள் அந்நாளிலேயே அறிந்திருந்தார்கள் என்பது மட்டுமல்லாது  நமக்கு நோயை எற்படுத்தக்கூடிய தொற்றுக்களைப் பரப்பும் ஊடகங்களை வளரவிடாது கவனித்து அவற்றை கட்டுப்படுத்தவேண்டும் என்றும் அவர்கள் மிகநன்றாகவே அறிந்துவைத்திருந்தார்கள். நுண்ணுயிரிகளின் ஊடகங்களான மூட்டைப் பூச்சி, எலி, பெருச்சாளி. கொசு, உண்ணி, சீலைப்பேன், ஆகியனவற்றை காலத்தே ஒழிப்பது என்கிறது என்கிற ஒழுங்குக் கட்டுப்பாடு “போக்கி” பண்டிகையை அனுசரிப்பதன் மூலம் கட்டாயமாக்கப்ப் பட்டது எனலாம்.

இன்று நாம் வாழும் வாழ்கையை அவர்கள் அந்த நாளி வாழவில்லை அந்த காலகட்டத்தில், மனிதர்கள் வாழும் வீடுகளில் கால்நடைகள் தவிர்க்க முடியாத அங்கமாக, விளங்கிவந்த நிலையில், அவற்றின் சுகாதாரத்தை மிகுந்த சிரத்தையுடன் கவனித்துத் தொழுவத்தை மராமத்து செயவதோடு நின்றுவிடாமல், கால் நடைகளை முழு அக்கறையுடன் சுத்தம் செய்து, தொற்றுக்கள் சேரும் மூலவாய்களான கொம்பு, மற்றும் கொளம்பு  இணுக்குக்களைத்  தூய்மைப்படுத்தி, உரசல் மற்றும் சிராய்ப்புக்களால் அடிக்கடி சேதாரப்படும் கொம்புகளுக்கு புறப்பரப்பு கெடாமலிருக்க வண்ணம் தீட்டி, அவற்றின் தோலிலே உள்ள புண், உண்ணிகள் ஆகியனவற்றைக் கவனித்து உரிய சிகிச்சையளித்து தூய்மைக்குத் தூய்மை, அழகுக்கு அழகு எனும்படியாக அலங்கரித்துச் சுகாதாரம் காத்த அக்காலக் கட்டுப்பாட்டை எவ்வாறு பாராட்டாமல் இருக்க முடியும் இன்று விலங்குகளின் நலம் பற்றி அதிகம் பேசுகிறோம் ஆனால் விலங்குகளின் நலனில் எவ்வளவு அக்கறை கொள்கிறோம் ஆனால் அன்றே இதனை நம் முன்னோர்கள் பேச்சோடு நிறுத்திவிடாமல் நடைமுறைப்படுத்தியிருந்தார்கள் நமக்காக மட்டுமே வாழ்ந்து, வாழ்நாள் உழைப்பையும் நமக்காகவே அளிக்கும் கால்நடைகள், வேலையற்ற உல்லாசமான ஒய்வு நாள் ஒன்றை அனுபவிக்க வேண்டும்.

அக்கால்நடைகள், ஊரைவேடிக்கப்பார்த்தபடி, ஓடிவிளையாடி மகிழ்திருக்க வேண்டும், இளைப்பாரவேண்டும் என்கிற உயர்ந்த சிந்தனையின் வெளிப்பாடுதான் மாட்டுப்பொங்கல், இதற்கான தயாரிப்பிற்கு, போக்கிப் பண்டிகையிலே பிள்ளையார் சுழி போட்டுவிடுவார்கள்.

இந்த ஏற்பாடுகளின் உண்மைப்பொருளை நாம் உணர்ந்து கொள்ளவேண்டும். மூடநம்பிக்கைகள் யாவை, உறுதியான ஏற்பாடுகள் யாவை என்பதை அடையாளம் கண்டு, சிறப்பானவற்றை நாமும் விட்டுப்போகாமல் சரியானப் புரிந்துகொள்ளளோடு நாமும் அதை சரியாக கடைபிடிக்க வேண்டும் போகிப் பண்டிகை என்றால் குப்பைகொளுத்துவது என்று குருட்டாம்போக்காக எண்ணிக்கொண்டு, டயர், ப்ளாஸ்டிக், மற்றும் தர்மொகோல்லான பொருட்களை எரிப்பது நாம் செய்யும் குறைபாடே

இன்று நாம், நம் பெரியவர்களின் சிந்தனையை புரிந்துகொண்ட வாக்கில், நம்முடைய இன்றைய சூழ்நிலைக்கு ஏற்றார் போன்ற ஒருங்கிணைந்த சமுதாயச் சுத்திகரிப்பு மற்றும் தொற்று நீக்கலை மேற்கொள்ள வேண்டும். போகி சொல்லும் சமுதாயச் சிந்தனையை, நாம் பிறருக்கு, மிகக் குறிப்பாகக் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். இதை நாம் தப்பாமல் செய் வெண்டியது நாம் ஒவ்வொருவரின் கடமையாக கருத வேண்டும்

இனியாவது ஒரு புதிய விதிசெய்வோம் அதை எந்த நாளும் காப்போம் எனும்படியாக, பண்டிகைகளை விடாது கொண்டாடுவோம், சரியான புரிந்துகொள்ளலோடு கொண்டாடுவோம் என உறுதி கொள்வோம்.