Home உலகம் உலகை சுற்றி..!

உலகை சுற்றி..!

14
0
SHARE

* அடுத்த ஆண்டு முதல் அமெரிக்காவில் குடியேரும் அகதிகளை பாதியாக குறைக்க அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது. ஏற்கனவே 5 இஸ்லாமிய நாடுகளுக்கு அமெரிக்காவில் தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில் அகதிகள் விவகாரத்திலும் அதிபர் டிரம்ப் நடவடிக்கை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

* சவூதி அரேபிய நாட்டில் பெண்களும் கார் ஓட்ட அனுமதி வேண்டும் என்ற போராட்டத்தை முன்னெடுத்தவர் மனால் அல் ஷரீப். இந்த நிலையில் மன்னர் சல்மானின் அறிவிப்புக்கு மனால் ஏகோபித்த ஆதரவு அளித்து உள்ளார். 2011&ம் ஆண்டு கார் ஓட்டி அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்ட குற்றத்திற்காக மனாலுக்கு 9 நாட்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

* தனிநாடு கேட்டு 50 ஆண்டுகாலமாக போராடி வரும் குர்திஸ்தான் மக்களின் எண்ணப்படி, கடந்த திங்கட்கிழமை பொதுவாக்கெடுப்பு நடந்தது. இதைதொடர்ந்து ஈரான் அரசு, குர்திஸ்தான் பகுதியில் செயல்பட்டு வரும் சர்வதேச விமான நிலையத்துக்கு தடை விதித்து விட்டது.

* சீனாவில் செயல்பட்டு வரும் வடகொரியா நிறுவனங்களை வரும் ஜனவரி மாதத்திற்குள் மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளது. வடகொரியா மீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதார தடைகளை நிறைவேற்றும் வகையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சீன வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது.

* லிபியாவில் உள்ள சிர்தி பகுதியில் செவ்வாயன்று இந்தத் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கப்படைகள் லிபியாவில் ஐஎஸ் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தின. அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற பின்னர் லிபியாவில் நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here