Home சுடச்சுட பா.வளர்மதி உள்பட 9 பேருக்கு தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் விருதுமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

பா.வளர்மதி உள்பட 9 பேருக்கு தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் விருதுமுதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

12
0
SHARE

சென்னை, ஜன. 13&

பா.வளர்மதி உள்பட 9 பேருக்கு தமிழ் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில் விருதுகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

தமிழ்மொழி மற்றும் இலக்கிய வளர்ச்சிக்கும் தமிழ்ச் சமுதாய உயர்வுக்கும் தொண்டாற்றிப்பெருமை சேர்த்த தமிழ்ப் பேரறிஞர்கள் மற்றும் தன்னலமற்ற தலைவர்கள் பெயரில், தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ள திருவள்ளுவர், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர், மகாகவி பாரதியார், பாவேந்தர் பாரதிதாசன், தமிழ்த்தென்றல் திரு.வி.க, முத்தமிழ்க்காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் உள்ளிட்ட விருதுகளைப் பெற்றிட தகுதியான பெருமக்களை முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று அறிவித்தார்.

இதில், திருவள்ளுவர் விருது &2018  முனைவர் கோ. பெரியண்ணனுக்கும், தந்தை பெரியார் விருது & 2017 .பா.வளர்மதிக்கும், அண்ணல் அம்பேத்கர் விருது  2017 டாக்டர்  சகோ.ஜார்ஜ், கே.ஜேக்கும், பேரறிஞர் அண்ணா விருது  2017: அ. சுப்ரமணியனுக்கும், பெருந்தலைவர் காமராசர் விருது  2017: தா.ரா.தினகரனுக்கும்,

மகாகவி பாரதியார் விருது  2017: முனைவர் சு. பாலசுப்ரமணியன் (எ) பாரதிபாலனுக்கும், பாவேந்தர் பாரதிதாசன் விருது  2017: கே. ஜீவபாரதிக்கும் தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது  2017: எழுத்தாளர் வை. பாலகுமாரனுக்கு, முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதன் விருது  2017:முனைவர் ப. மருதநாயகத்துக்கும் வழங்கப்படுகிறது.

இவ்விருதுகளை வரும் 16ம்தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 5மணிக்கு சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் திருவள்ளுவர் திருநாள் மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகள் வழங்கும் விழாவில் முதல்வர் வழங்குகிறார். விருது பெறுவோர் ஒவ்வொருவருக்கும் ரூ.1லட்சம் காசோலை, ஒரு சவரன் தங்கப்பதக்கம் மற்றும் விருதுக்கான தகுதிச் சான்றிதழ் ஆகியன வழங்கி சிறப்பிக்கப்படுவர். மேலும், இவ்விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர்கள் 50பேருக்கு வாழ்நாள் முழுவதும் திங்கள்தோறும் உதவித்தொகை ரூ.2500 மற்றும் மருத்துவப்படி ரூ.100 பெறுவதற்கான அரசாணைகள் அளிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here