Home மற்றவை பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.6,522 கோடி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

பல்வேறு திட்டப்பணிகளுக்கு ரூ.6,522 கோடி துணை நிதிநிலை அறிக்கை தாக்கல்

8
0
SHARE

சென்னை, ஜன. 13&

பல்வேறு திட்டப்பணிகளை மேற்கொள்ள 6,522.03 கோடி நிதி ஒதுக்க முதல் துணை நிதி நிலையை அறிக்கையை துணை முதல்வர் தாக்கல் செய்தார்.

பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 2017 மற்றும் 2018ம் ஆண்டின் கூடுதல் செலவிற்கான முதல் துணை நிதி நிலை அறிக்கையை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். இது தொடர்பாக அவர் பேசுகையில், இந்த துணை மதிப்பீடுகள் மொத்தம் 6,522.03 கோடி ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கின்றன.

2017 மற்றும் 2018ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு புதுப் பணிகள் மற்றும் புது துணைப்பணிகள் குறித்து ஒப்பளிப்பு செய்யப்பட்ட இனங்களுக்கு சட்டமன்றப் பேரவையின் ஒப்புதலைப் பெறுவதும்.எதிர்பாராச் செலவு நிதியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள தொகையினை அந்நிதிக்கு ஈடு செய்வதும் இந்த துணை மானியக் கோரிக்கையின் நோக்கமாகும்.

அரசுப் போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற பணியாளர்களுகான ஓய்வுக்காலப் பலன்கள், தற்போது பலன்கள், தற்போது  பணியில் உள்ள பணியாளர்கள் தொடர்பான நிலுவைகள் வாகன விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான இழப்பீடு ஆகியவற்றை வழங்க வழிவகை செய்ய அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு வழிவகை முன்பணமாக 2,519.25 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதற்கு இந்த நிதி சேர்க்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 8,272 குடியிருப்புகளையும் 1.57 லட்சம் தனி வீடுகளையும் கட்டுவதற்காக 588.12 கோடியை அரசு கூடுதலாக அனுமதித்துள்ளது.

இதற்கென வீட்டு வசதித்துறையில் 303.46 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் பிரதம மந்திரி கிரிஷி சின்சாய் யோஜனா திட்டத்தின் கீழ் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தைச் செயல்படுத்த 268.07 கோடியை அரசு அனுமதித்துள்ளது.இந்த நிதி துணை மதிப்பீடுகளில் அடையாளமாக ரூ.1,000 சேர்க்கப்பட்டுள்ளது. மீதி தொகை மானியத்தில் ஏற்படும் மீதத்திலிருந்து மறுநிதியதுக்கத்தின் மூலம் செலவிடப்படும்.பாக் வளைகுடாப் பகுதியில் ஆழ்கடல் மீன்பிடிப்பை ஊக்குவிக்க சாதாரணப் படகுகளை ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளாக மாற்றும் திட்டத்தைச்  செயல்படுத்துவதற்காக அரசு 286 கோடி ரூபாயை அனுமதித்துள்ளது.

எதிர்பாராச் செலவு நிதியத்திலிருந்து முன்பணமாக வழங்கப்பட்டதை ஈடு செய்ய இத்துணை மதிப்பிடுகளில் ரூ.19.89 கோடி சேர்க்கப்பட்டுள்ளது. தேசிய வேளாண் காப்புறுதித் திட்டத்தின் கீழ் இழப்பீட்டுத் தொகை வழங்க மாநில அரசின் பங்கான 177.86 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது. இதில் இதற்கு அடையாளமாக ரூ.1.000 சேர்க்கப்பட்டுள்ளது. வறட்சி நிவாரண நடவடிகையாக குடிநீர் பணிகளை மேற்கொள்ள 120 கோடியை அரசு அனுமதித்துள்ளது.

மேலும் மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு மாற்றம் செய்வதற்கு 1.799.75 கோடி ரூபாய் தேவைப்படுகிறது.இவற்றிற்கென இந்த துணை மதிப்பீடுகளில் 1.919.75 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. உட்கட்டமைப்பு வளர்ச்சி நிதியத்திலிருந்து 608 கோடி ரூபாய் செலவில் 1.435.96 கிலோ மீட்டர் நீளமுள்ள 460 ஊராட்சி ஒன்றியச் சாலைகள் மற்றும் ஊராட்சி  சாலைகளை இதர மாவட்டச் சாலைகளின் தரத்திற்கு மேம்படுத்துதல் மற்றும் நிலை உயர்த்தும் பணிகளுக்கு அரசு நிருவாக அனுமதி அளித்துள்ளது.இத்துணை மதிப்பீடுகளில்  அடையாளமாக ரூ.1.000 சேர்க்கப்பட்டுள்ளது.

சென்னை  மாநகராட்சி கோவை மற்றும் சேலம் மாநகராட்சிகளுக்கு வட்டியில்லா முன்பணமாக 793.81 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இதில் குடிநீர் வழங்கல்துறைக்கு 793.81 கோடி ரூபாய் சேர்க்கப்பட்டுள்ளது. மாநில நெடுஞ்சாலை முக்கிய மாவட்டச் சாலைகள் மற்றும் இதர மாவட்டச் சாலைகளின் குறித்த கால பாராமரிப்புச் செலவினங்களுக்கு அரசு கூடுதலாக 300 கோடி ரூபாயை அரசு அனுமதித்துள்ளது.இத்துணை மதிப்பீடுகளில் அடையாளமாக 1.000 சேர்க்கப்பட்டுள்ளது.

புறவழிச்சாலை,வட்டச்சாலை மற்றும் ஆறு வழிப்பாதைகள் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக அரசு 594.58 கோடி ரூபாய் அரசு அனுமதித்துள்ளது. நெடுஞ்சாலைத்துறைக்கு இத்துணை மதிப்பீடுகளில் அடையாளமாக 1.000 சேர்க்கப்பட்டுள்ளது. அரியலூர் சிமெண்ட் அலகின் விரிவாக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு டான்செம் நிறுவனத்திற்கு வழிவகை முன்பணமாக 300 கோடியை அரசு அனுமதித்துள்ளது. இந்த துணை மதிப்பீடுகளில் தொழில்துறைக்கு ரூ.1.000 ரூபாய் அடையாளமாக சேர்க்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here