Home தமிழகம் மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் நிதி நிலை கட்டுக்குள் உள்ளதுபேரவையில் முதல்வர் திட்டவட்டம்

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் நிதி நிலை கட்டுக்குள் உள்ளதுபேரவையில் முதல்வர் திட்டவட்டம்

11
0
SHARE

சென்னை, ஜன. 13&

மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தின் நிதி நிலைமைகட்டுக்குள் உள்ளது என்று முதல்வர் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்க்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது.மாநில அரசின் நிதிநிலை பற்றிப் பல்வேறு சந்தேகங்கள், கருத்துக்கள் எழுப்பப்பட்டுள்ளன.   வெளியிலும் இதுபற்றி சில கருத்துக்கள் அவ்வப்போது தெரிவிக்கப்படுகின்றன.

ஒரு மாநிலத்தின் சிறந்த நிதி மேலாண்மைக்கு அளவுகோல் நிதிப்பற்றாக்குறையும், மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் கடன் அளவும் தான்.

அதைசீராகவும், சிறப்பாகவும் இந்த அரசு பராமரித்து வருகிறது.  வருவாய்ப் பற்றாக்குறை உள்ள நிலையைத் தான் நிதி நெருக்கடி எனக் குறிப்பிட்டு, அந்த நிலையையும் சமாளித்து  உயர்வு அரசு அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது.  எனவே, நிதி மேலாண்மை என்பது கடினமான நிதிநிலை சூழலில் எப்படிப் பராமரிக்கப்படுகிறது என்பதை பொறுத்துத் தான். எனினும், திட்டங்களுக்கு உரிய நிதி வழங்கப்பட்டு வருகிறது என்றும், அது குறைக்கப்படவில்லை என்றும் ஆளுநர் உரையில்தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

201617 ஆம் ஆண்டு திருத்த வரவுசெலவுத் திட்டமதிப்பீடுகளில் நிதிப் பற்றாக்குறை 2.96 சதவீதமாக மதிப்பிடப்பட்டு,பின்னர் திருத்த மதிப்பீட்டில் 4.58 சதவீதமாக உயர்த்தப்பட்டது.201617ஆம் ஆண்டில், 3 சதவீத வரையறையைக் கடப்பதற்கு முக்கிய காரணம்,‘உதய்’ திட்டத்தின் கீழ் 22 ஆயிரத்து 815 கோடி ரூபாய் மின்சார வாரியத்தின் கடனை, மாநில அரசே ஏற்றுக் கொண்டதுதான்.

இதற்கென மத்திய அரசுநிதிப் பற்றாக்குறை வரம்புக்கு, 201617ஆம் ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது.  ‘உதய்’ திட்டம் நீங்கலாக, நிதிப் பற்றாக்குறை கணித்ததால், அது திருத்த மதிப்பீட்டின்படி 2.88 சதவீதமாக இருந்தது.  201617ஆம் ஆண்டின் முதல் நிலைக் கணக்குகளின்படி நிதிப் பற்றாக்குறை 56 ஆயிரத்து 171 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறைக்கான விகிதாச்சாரம் 4.19 சதவீதமாகவும், உதய் திட்டத்தின் கீழ் ஏற்கப்பட்டுள்ள கடன் நீங்கலாக நிதிப் பற்றாக்குறை 33,356 கோடி ரூபாயாகவும், நிதிப் பற்றாக்குறைக்கான விகிதாச்சாரம் 2.49 சதவீதமாகவும் இருந்தது.

நிதிப் பற்றாக்குறை 3 சதவீத வரையறையைக் கடக்கும் என்பதை அறிந்து,தமிழ்நாடு நிதி மேலாண்மை மற்றும் பொறுப்புடைமைச் சட்டத்திற்கு,2016 17ஆம் ஆண்டிற்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 2017 18ஆம்ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, மாநில மொத்த உற்பத்திமதிப்பில், நிதிப் பற்றாக்குறை 2.79 சதவீதமாக, 3 சதவீதம் என்ற வரையறைக்குள் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களுடன் தமிழ்நாட்டை ஒப்பீடுகையில், 2017 18 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டில், நிதிப் பற்றாக்குறை, மாநில மொத்த உற்பத்தியில், மத்திய பிரதேசத்தில் 3.49 சதவீதமாகவும், தெலுங்கானாவில் 3.49 சதவீதமாகவும், உத்தர பிரதேசத்தில் 2.97 சத வீதமாகவும், கேரளாவில் 3.44  சதவீதமாகவும் உள்ளன.

மத்திய அரசின் நிதிப் பற்றாக்குறை, 201718 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்ட மதிப்பீட்டின்படி, 3.20 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டின் நிதிநிலை மத்திய அரசைக் காட்டிலும், மற்ற மாநிலங்களைக் காட்டிலும் கட்டுக்குள் நிர்வகிக்கப்படுகிறது என்பது தெளிவாகிறது.

மேலும், நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படியும், நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டத்தின்படியும், நிதிப் பற்றாக்குறை 201617 ஆம் ஆண்டைத் தவிர்த்து, வரையறுக்கப்பட்டுள்ள மாநிலத்தின் மொத்த உற்பத்தி மதிப்பில் 3 சதவீதத்திற்கு உள்ளாகவே கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, தமிழ்நாட்டில் நிதி நிர்வாகம் சீராகவே நிர்வகிக்கப்படுகிறது. இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here