Home சுடச்சுட 10 மாதங்களில் 4,903 கோப்புகளில் கையெழுத்துமுதல்வர் பெருமிதம்

10 மாதங்களில் 4,903 கோப்புகளில் கையெழுத்துமுதல்வர் பெருமிதம்

8
0
SHARE

சென்னை, ஜன. 13&

கடந்த 10 மாதங்களில் 4 ஆயிரத்து 903 கோப்புகளில் கையெழுத்திட்டுள்ளேன் என்று முதல்வர் பேசினார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்க்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது. மக்களுக்கு பயன் தரும் பல்வேறு கொள்கை முடிவுகளை எடுப்பதும், வளர்ச்சித் திட்டப் பணிகளை துரிதமாக செயல்படுத்துவதும் ஒரு மாநில முதலமைச்சரின் முக்கிய பணியாகும்.  அதை நல்லமுறையில் செய்யும் வகையில், கடந்த 10 மாதங்களில் மட்டும் 4 ஆயிரத்து  903 கோப்புகள் எனது பரிசீலனைக்கு  பிறகு உத்தரவிடப்பட்டுள்ளது என்பதையும், இன்றளவில் எனது அலுவலகத்தில் எந்த கோப்பும் நிலுவையில் இல்லை என்பதையும்  தெரிவித்துக் கொள்கிறேன்.மழை, வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை பேரிடர்கள், அரசியல் திருப்பங்கள், போராட்டங்கள் என  எது வந்தாலும், அவற்றுக்கெல்லாம் திடமாகத் தீர்வு காண்பது மட்டுமின்றி, கடின உழைப்பையும் மறைந்த முதல்வரிடம்  கற்றுக் கொண்டதால் பல பிரச்னைகளுக்கு நல்ல முடிவு எட்டப்பட்டுள்ளது. இதன் மூலம், மறைந்த முதல்வரின் வழியில் இருந்து ஓரடியும் பிறழாமல் இந்த அரசு வெற்றி நடைபோடுகிறது.இவ்வாறு பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here