Home விளையாட்டு மெஸ்சியின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

மெஸ்சியின் அபார ஆட்டத்தால் பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேற்றம்

15
0
SHARE

லண்டன், ஜன.13&

மெஸ்சி அபார ஆட்டத்தால், பார்சிலோனா காலிறுதிக்கு முன்னேறி உள்ளது.

கோபா டெல் ரே’ கோப்பைக்கான காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பார்சிலோனா செல்டா விகோ அணியுடன் மோதியது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இரண்டு அணிகளும் லெக்1, லெக்2 என இரண்டு முறை மோத வேண்டும்.

செல்டா விகோவிற்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற முதல் லெக்கில் பார்சிலோனாவிற்கு ஈடுகொடுத்து விளையாடிய செல்டா விகோ 1&1 என போட்டியை டிரா செய்தது.

இந்த நிலையில் நேற்று பார்சிலோனாவிற்கு சொந்தமான மைதானத்தில் லெக்2 ஆட்டம் நடைபெற்றது. சொந்த மைதானத்தில் பார்சிலோனா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. ஆட்டத்தின் 13&வது மற்றும் 15&வது நிமிடத்தில் மெஸ்சி அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினார்.

28வது நிமிடத்தில் ஜோர்டி அல்பா ஒரு கோலும், 31&வது நிமிடத்தில் சுவாரஸ் ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா முதல் பாதி நேரத்தில் 4&0 என முன்னிலைப் பெற்றது.

2&வது பாதி நேரத்தில் 87&வது நிமிடத்தில் பார்சிலோனாவின் இவான் ராகிடிக் ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 5&0 என வெற்றி பெற்றது. முதல் லெக்ஐயும் சேர்த்து 6&1 என பார்சிலோனா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here