Home இந்தியா கடந்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை சரிவுஆய்வில் தகவல்

கடந்த ஆண்டு அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை சரிவுஆய்வில் தகவல்

8
0
SHARE

புதுடெல்லி, ஜன.13&

இந்தியாவில் கடந்த ஆண்டு (2017), முக்கிய 9 நகரங்களின் அடுக்குமாடி குடியிருப்பு விற்பனை சரிவை சந்தித்துள்ளது ஆய்வில் தெரியவந்து உள்ளது.

இதுகுறித்து ரியலிட்டி போர்ட்டல் ப்ராப் டைகர் நிறுவனம் நடத்திய ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:&

ரியல் எஸ்டேட்டில் புதிய சட்டம் மற்றும் தேவைக் குறைவு போன்ற காரணங்களால் இந்தியாவின் உள்ள குர்கான், நொய்டா, மும்பை, பெங்களூரு, சென்னை, கொல்கத்தா, புனே, ஐதராபாத் மற்றும் அகமதாபாத் ஆகிய 9 முக்கிய பெரு நகரங்களில் 2017&ம் ஆண்டில் 2,18,500 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன்.

இது கடந்த 2016&ம் 2,63,500 வீடுகள் விற்பனையாகியுள்ளது என ப்ராப் டைகர் இணையதளம் அறிக்கை தெரிவித்துள்ளது. இந்த நிலையில் 2017ம் ஆண்டு அடுக்குமாடி வீடுகள் விற்பனை திட்டங்களின் துவக்கம் கூட 43 சதவீதம் சரிவடைந்தது.

1,63,573 வீடுகளுக்கான  விற்பனைத் திட்டங்கள மட்டுமே துவக்கப்பட்டுள்ளன. கடந்த 2016ம் ஆண்டில் ஆண்டில் 2,88,748 வீடுகளுக்கான துவக்க விழாக்கள் நடந்தன. கடந்த 2017ம் ஆண்டு இந்தியாவின் 8 பெரு நகரங்களில் வீடுகள் விற்பனை 7 சதவீதமும், வீடுகள் கட்டுதல் 41 சதவீதமும் சரிந்துள்ளது.

அடிக்குமாடி வீடுகள் விற்பனை 35 சதவீதம் குறைந்துள்ளது. குர்கான் மற்றும் ஐதராபாத் ஆகிய இரண்டு நகரங்களில் மட்டும் வீடு விற்பனை அதிகரித்துள்ளதாக ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

சரக்கு மற்றும் சேவை (ஜி.எஸ்.டி.) வரி அமலுக்கு வந்த பின் வீடு விற்பனையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ப்ராப் டைகர் என்ற இணையதளத்தின் தலைமை முதலீட்டு அதிகாரி அன்கூர் தவான் கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு 2017ல் அகமதாபாத் நகரில் வீடு விற்பனை 33 சதவீதம் சரிந்து, 12,000 வீடுகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. புனேவில் 32 சதவீதம் சரிந்து 34,000 வீடுகளும், நொய்டாவில் 30 சதவீதம் சரிந்து 16,000 வீடுகளும், பெங்களூருவில் 23 சரிந்து 31,500 வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் சென்னையில் 3 சதவீதம் சரிந்து 15 ஆயிரத்து 500 வீடுகளும், கொல்கத்தாவில் 14 ஆயிரத்து 500 வீடுகளும், மும்பையில் 60 ஆயிரம் வீடுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here