Home இந்தியா முகவரி பக்கம் இல்லாமல் பாஸ்போர்ட் வெளிவரும் வெளியுறவுத்துறை தகவல்

முகவரி பக்கம் இல்லாமல் பாஸ்போர்ட் வெளிவரும் வெளியுறவுத்துறை தகவல்

11
0
SHARE

புதுடெல்லி, ஜன. 13&

பாஸ்போர்ட்டை இனி முகவரி அடையாளத்திற்கு பயன்படுத்தக்கூடாது என்றும், விரைவில் முகவரி பக்கமே அச்சடிக்கப்போவதில்லை என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம், பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக எழுந்த புகாரை தொடர்ந்தே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுவரை பாஸ்போர்ட்டின் கடைசி பக்கத்தில் உரியவரின் பெயர், தந்தை மற்றும் தாயின் பெயரோடு முகவரியும் அச்சிடப்பட்டு வந்தது.

இவ்வாறு அச்சிடப்பட்டு வந்த முகவரியை கொண்டு பல முறைகேடுகளும், போலி பாஸ்போர்டுகளும் தயாரிக்கப்படுவதால் எழுந்த சர்ச்சையை தொடர்ந்து, மூன்று நபர் குழு இந்த முடிவை பரிந்துரைத்ததாகவும், இதனை வெளியுறவுத்துறை அமைச்சகமும் ஒப்புக்கொண்டதாகவும் தெரிகிறது.

மேலும் இனி அந்த கடைசி பக்கம் கொண்டபடி பாஸ்போர்ட் அச்சிடப்படாது என்றும் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்தபுதுவகையானபாஸ்போர்டுகள்அனைத்தும்நாசிக்கில்உள்ளஅரசுஅச்சகத்தில்அடிக்கப்படும்என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here