Home தமிழகம் கடந்த ஆண்டைவிட ஹஜ் பயணத்திற்க்காக தமிழகத்திற்கு கூடுதலாக 353 பயண இருக்கை

கடந்த ஆண்டைவிட ஹஜ் பயணத்திற்க்காக தமிழகத்திற்கு கூடுதலாக 353 பயண இருக்கை

7
0
SHARE

சென்னை, ஜன. 13&

ஹஜ் 2018ல் தமிழ்நாடுமாநில ஹஜ் குழுவின் மூலம் புனித ஹஜ் பயணம் மேற்கொள்வதற்காக சுமார் 9500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.

மும்பையிலுள்ள இந்திய ஹஜ் குழுவானது இந்த ஆண்டு தமிழ்நாட்டிற்கு 3542 ஹஜ் பயண இருக்கைகள் வழங்கியுள்ளது. தமிழ்நாட்டிற்கு கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட 3,189 இருக்கையைவிட இந்த ஆண்டு கூடுதலான இருக்கைகள் ஒதுக்கீடு செய்யவேண்டும் என தமிழ்நாடு முதல்வர் பிரதமர்க்கு கடிதம் எழுதியதின் பலனாக இந்த ஆண்டு, கடந்த ஆண்டைவிட கூடுதலாக 353  ஹஜ் பயண இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில்சிறப்புவகையின்கீழ்ஒதுக்கீடுசெய்ததுபோகஎஞ்சியுள்ள 3300 பொதுவகை பயணிகளை குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சியானது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் தலைமையிலும், தமிழ்நாடுமாநில ஹஜ் குழுவின் தலைவர் ஹாஜி அப்துல் ஜப்பார் முன்னிலையிலும் வருகிற 17.01.2018 புதன்கிழமை சென்னை, ராயப்பேட்டையிலுள்ள புதுக்கல்லூரி ஆணைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here