Home தமிழகம் சட்டப்பேரவையில் கருணாநிதியை வாழ்த்திய ஓ.பி.எஸ்.

சட்டப்பேரவையில் கருணாநிதியை வாழ்த்திய ஓ.பி.எஸ்.

8
0
SHARE

சென்னை, ஜன.13&

தமிழக சட்டப்பேரவையில்  நேற்று நடைபெற்ற நிகழ்ச்சிகள் முடிவடைந்ததும், சட்டப்பேரவையின் நிகழ்ச்சி களை மறு தேதி குறிப்பிடாமல் தள்ளி வைப்பதற்கான தீர்மானத்தை முன்மொழிவதற்காக, அவை முன்னவரும்,  துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தை சட்டப்பேரவைத் தலைவர்  .தனபால் அழைத்தார்.

அதைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், சட்டப்பேரவைத் தலைவர், முதல்வர், அமைச்சர்கள், எதிர்கட்சித் தலைவர், அரசுக் கொறாடா, எதிர்கட்சி துணைத் தலைவர், துணை சபாநாயகர் சட்டமன்ற உறுப்பினர்கள்,  அனைவருக்கும் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் முதல்வரும், இந்த சட்டமன்ற உறுப்பினர் (தி.மு.. தலைவர் கருணாநிதி), பூரண குணமடைந்து இந்த சபையில் கலந்து கொண்டு பேச வேண்டும் என்ற எனது அவாவை தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டார்.

பின்னர் சட்டப் பேரவை  நிகழ்ச்சிகளை மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கும் தீர்மானத்தை துணைமுதல்வரும், அவை முன்னவருமான ஓ.பன்னீர்செல்வம் முன் மொழிந்தார். அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, சட்டப் பேரவை  நிகழ்ச்சிகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படுவதாக சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார்.

இதற்கு முன்னதாக சட்டப்பேரவைத் தலைவர்  தனபால், சட்டப்பேரவை நிகழ்ச்சிகள் 5 நாட்கள்  நல்ல முறையில் நடத்தி பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றுவதற்கு உதவிய அனைத்து எம்.எல்..க்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பொங்கல் வாழ்த்துகள் என சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here