Home அரசியல் எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு விவகாரம் பேரவையில் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் கடும் விவாதம்

எம்.எல்.ஏ.க்களுக்கு சம்பள உயர்வு விவகாரம் பேரவையில் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் கடும் விவாதம்

53
0
SHARE

சென்னை, ஜன. 13&

எம்.எல்..க்களுக்கு சம்பள உயர்வு தொடர்பாக பேரவையில் ஸ்டானுக்கு துணை முதல்வருக்கு கடும் விவாதம் நடைபெற்றது.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுனர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தொடர்பாக விவாதம் நேற்று முன்தினம் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் உரையுடன் முடிவு பெற்றது. நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் எம்.எல்..க்களுக்கு சம்பள உயர்வு தொடர்பான மசோதா தொடர்பான வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. இதன் மீது எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் 55,000 ரூபாய் சம்பளத்தை 1 லட்சத்து 5 ஆயிரமாக உயர்த்திக் கொடுப்பது.

அதாவது 100 சதவீத சம்பள உயர்வு என்பது தேவையில்லாதது. தற்போது மாநில அரசு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியிருக்கும் நிலையில் சம்பள உயர்வு அதுவும் மக்கள் பிரதிநிதிக்கு தேவையா? என்பதை இந்த அரசு கவனமாக யோசித்துப் பார்க்க வேண்டும். கடுமையான நிதி நெருக்கடியில், மாநில அரசு திணறிக்கொண்டிருக்கும் போது, நீங்களே நிதிநிலை அறிக்கையிலும் இங்கே சமர்ப்பிக்கப்பட்ட ஆளுனர் உரையிலும் திரும்ப திரும்ப கூறிவிட்டு இப்படியரு சம்பள உயர்வை உயர்த்திக் கொள்ள வேண்டுமா?

அதுமட்டுமல்ல,போக்குவரத்துத் தொழிலாளர்கள் வெறும் 0.13 சதவீத ஊதிய உயர்வுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள். நிதி நெருக்கடியால் இந்த ஊதிய உயர்வை வழங்க முடியாது என அரசுத் தரப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சரும், முதலமைச்சரும் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். கல்வி அமைச்சர்  சில நாட்களுக்கு முன்பு ஒரு கருத்தை சொன்னார்.

மனம் இருக்கிறது ஆனால் அரசிடம் பணம் இல்லை என்று ஒரு பொது நிகழ்ச்சியில் வெளிப்படையாக சொல்லியிருக்கிறார். எனவே இதுபோன்ற சூழ்நிலையில் மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற நாமெல்லாம் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்த சம்பள உயர்வை தி.மு.. கடுமையாக எதிர்க்கிறது. நான் மட்டுமல்ல,தி.மு..வில் இருக்கும் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இதனை எதிர்க்கிறோம். எனவே பேரவைத் தலைவருக்கு இதுகுறித்து விளக்கமாக எழுதி எங்களுடைய சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கையெழுத்திட்டு கொடுக்க இருக்கிறோம். என்றார்.

அப்போது துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தி.மு.. ஆட்சியிலும் சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது தி.மு.. உறுப்பினர்கள் திராவிடமணி, மதிவாணன் ஆகியோர் முன்மொழியை அளித்துள்ளனர். பெரும்பாலான சட்டமன்ற உறுப்பினர்கள் இதனை வரவேற்றுள்ளனர். சம்பள உயர்வு அளித்துள்ள மாநிலங்களில் தமிழகம் 10 இடத்தில் உள்ளது என்றார்.

இந்த சட்டமன்றத்தில் சம்பள மசோதா தாக்கல் செய்யப்பட்டபோது அமைதியாக இருந்த திமுக இப்போது இதனை எதிர்ப்பதற்க்கு என்ன காரணம்? இதன் மூலம் அரசியல் ஆதாயத்தை தி.மு.. தேடப்பார்க்கிறது. அனைத்து எம்.எல்.ஏக்களும் பணக்காரர்கள் இல்லை. ஏற்காடு அ.தி.மு.. உறுப்பினர் சித்ரா இன்னும் தொகுப்பு வீட்டில்தான் இருக்கிறார். சொல்ல முடியாமல் பல எம்.எல்..க்கள் உள்ளனர்.

நிதி பிரச்சினை என்பது அதன் அளவுக்குள் மட்டுமே உள்ளது. மின்வாரியத்திற்க்கு அரசு நிதி அளித்த காரணத்தால் தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.என்றார். இதற்கு ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.. உறுப்பினர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். தொடந்து பேசிய ஸ்டாலின், தி.மு.. ஆட்சியில் சம்பள உயர்வு அளிக்கப்பட்டது உண்மை. அதற்குப் பிறகு உங்கள் ஆட்சியில் மறைந்த முதல்வர் ஜெயலலிதா  பொருளாதார நெருக்கடி காரணமாக உயர்த்திய சம்பளத்தை ரத்து செய்திருக்கிறார். பொருளாதார ஏற்றம் வந்த பிறகு சம்பள உயர்வு தரப்படும் என்று இதே சட்டப்பேரவையிலே பேசியதை இந்த அரசின் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் என்றார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இது சக சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணம். அவர்களை நாம் காப்பாற்றவில்லை என்றால் யார் காப்பாற்றுவார்கள். மனசாட்சிப்படி நடந்துகொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் பல்வேறு பிரச்சினைகளை சட்டமன்ற உறுப்பினர்கள் சந்திக்கவேண்டியுள்ளது. பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு செல்லவேண்டியுள்ளது. மக்களுக்கு சேவை பணிசெய்யும்போது பல்வேறு செலவுகள் ஏற்படுகிறது.அவர்களின் சேவை மக்களுக்கு தேவைப்படுகிறது.

இந்த நிலையில் சம்பள உயர்வு தேவையான ஒன்றுதான்.அரசு ஊழியர்களுக்கு 7&வது ஊதியகுழுவினால் 14.700 கோடி ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.அரசு ஊழியர்களை மதிக்கும் அரசு இது என்றார். தொடர்ந்து பேசிய ஸ்டாலின்  ஏதோ அரசியல் ஆதாயத்திற்காக என்று, யார் அரசியல் ஆதாயத்திற்காக என்னென்ன செய்தார்கள் என்பதை சொல்ல ஆரம்பித்தால் அது வேறு விவாதத்தில் போய் விடும். தி.மு.. சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் உங்களிடத்திலே ஒரு கடிதத்தை கொடுத்து இருக்கிறோம்.

போக்குவரத்துத் தொழிலாளர்களின் பிரச்சினை தீர்கிற வரையில் இந்த சம்பள உயர்வு தேவை தானா? என்றார்.தொடந்து பேசிய துணை முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் மறைந்த முதல்வர் ஜெயலலிதா சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டபோது அதனை எதிர்த்த  கம்யூனிட்ஸ் கட்சி உறுப்பினரை பார்த்து சம்பள உயர்வை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அளிப்பார்களா என்று கேட்டார்.

அதையே உங்களிடம் நான் கேட்கிறேன்.சம்பள உயர்வை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு அளிக்க தயாரா? என்றார்.இதற்கு பதில் அளித்த ஸ்டாலின் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்கப்படும் வரை ஊதிய உயர்வை பெறப்போவது இல்லை. அப்படி ஊதிய உயர்வு அளித்தால் அதை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்குகிறோம் என்றார். அப்போது குறுக்கிட்டு பேசிய முதல்வர், தி.மு.. ஆட்சி காலத்தில் போக்குவரத்துகழகத்திற்க்கு ரூ. 922 கோடி பாக்கிவைத்து சென்றீர்கள். இந்த நிலுவை தொகையையும் மறைந்த முதல்வர்தான் வழங்கினார்.

இவ்வாறு விவாதம் நடைபெற்றது.

பின்னர் காங்கிரஸ் கட்சி சார்பில் விஜயதாரணி பேசினார். இதனை தொடந்து  மசோதா வாக்கெடுப்புக்கு விடப்பட்டு மசோதா நிறைவேறியது.