Home அரசியல் விரைவில் உள்ளாட்சி தேர்தல் பேரவையில் முதல்வர் அறிவிப்பு

விரைவில் உள்ளாட்சி தேர்தல் பேரவையில் முதல்வர் அறிவிப்பு

10
0
SHARE

சென்னை, ஜன. 13&

தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று பேரவையில் முதல்வர் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. வார்டுகளை பிரிக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையட்டி சென்னை காமராஜர் சாலையில் நினைவு வளைவு அமைக்கப்படும்.கடற்கரையில் உள்ள மறைந்த முதல்வர் ஜெயலலிதா சமாதி அருகே நினைவு மண்டபம் அமைக்கப்படும்.

அவருடைய வரலாற்றை எதிர்கால சந்திதியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அவர் வசித்த வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றும் பணி நடைபெற்றுவருகிறது என்று முதல்வர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here