Home விளையாட்டு தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: இந்திய ராணுவ அணி உள்பட 4 அணிகள்...

தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி: இந்திய ராணுவ அணி உள்பட 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி

15
0
SHARE

கோவை, ஆக.31 தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்திய ராணுவ அணி உள்பட 4 அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.

தேசிய அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டி கோவை பி.எஸ்.ஜி டெக்கில் நடந்து வருகிறது. இந்திய அளவில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. இந்த அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். 3வது நாளான நேற்று நடந்த முதல்போட்டியில் விஜயா வங்கி அணியை எதிர்த்து சென்னை அரைஸ் ஸ்டீல் அணி விளையாடியது. இதில் விஜயா வங்கி அணி 75 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. சென்னை அரைஸ் ஸ்டீல் அணி 74 புள்ளிகள் மட்டுமே பெற்று இருந்தது. 2வது நடந்த போட்டியில் சுங்கம் அணியும், கேரள மின்சார வாரிய அணியும் மோதியது. இதில் சுங்கம் அணி 79 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. கேரள மின்சார வாரிய அண¤ 70 புள்ளிகளை மட்டுமே எடுத்தது. 3வது நடந்த போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியை எதிர்த்த ஆர்.சி.எப். அணி விளையாடியது. இதில் பஞ்சாப் அணி 113 புள்ளிகள் பெற்று அபார வெற்றியை பெற்றது.

எதிர்த்தி விளையாடிய ஆர்.சி.எப் அணி 71 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணி மட்டுமே முதன் முறையாக 100க்கும் மேல் புள்ளிகளை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது. 4வதாக நடந்த போட்டியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், இந்திய ராணுவ அணியும் விளையாடியது. இதில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 75 புள்ளிகளை பெற்று வெற்றி பெற்றது. இந்திய ராணுவ அணி 71 புள்ளிகளை பெற்று தோல்வியடைந்தது.

போட்டிகளில் அதிக புள்ளிகளை பெற்ற 4 அணிகள் அரை இறுதியில் விளையாட தகுதி பெற்றன. அதன்படி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, விஜயா வங்கி அணி, பஞ்சாப் போலீஸ் அணி, இந்திய ராணுவ அணி ஆகிய 4 அணிகள் அரை இறுதியில் விளையாடுகிறது. இன்று மாலை 5 மணிக்கு இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், விஜயா வங்கி அணியும் விளையாடுகிறது. மற்றொரு போட்டியில் பஞ்சாப் போலீஸ் அணியும் இந்திய ராணுவ அணியும் மோதுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here